• Nov 26 2024

யாழ். மக்களே அவதானம்..! வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்..!

Chithra / Jan 14th 2024, 10:08 am
image

 

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லட்சம் ரூபா  பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ் வாசி ஒருவர் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு,

பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருந்தபொழுது கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்டவர் சுன்னாகம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் போலி விசாக்களை பயன்படுத்தி பத்துக்கு மேற்பட்டவர்களை ஏமாற்றியதுடன்,

1 கோடிக்கு மேல் பணம் பெற்று விட்டு தலைமறைவாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் பொலிஸாரால் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.


யாழ். மக்களே அவதானம். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்.  வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.யாழ் மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லட்சம் ரூபா  பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ் வாசி ஒருவர் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு,பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருந்தபொழுது கைது செய்துள்ளனர்.கைது செய்யபட்டவர் சுன்னாகம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் போலி விசாக்களை பயன்படுத்தி பத்துக்கு மேற்பட்டவர்களை ஏமாற்றியதுடன்,1 கோடிக்கு மேல் பணம் பெற்று விட்டு தலைமறைவாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.மேலதிக விசாரணைகளின் பின் பொலிஸாரால் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement