• May 18 2024

யாழ். பல்கலை மாணவர்களின் பேரணியை தடுக்க குவிந்த பொலிசார் - அனுமதி இல்லை என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

Chithra / Feb 4th 2023, 10:55 am
image

Advertisement

வடக்கிலிருந்து கிழக்கு வரை சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்படும் பேரணி காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்தில் இருந்து கிழக்கு நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது.


எனினும் பேரணி ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

அத்துடன் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்திருந்தன.


எனினும் போராட்ட பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற கோசம் மாணவர்களால் எழுப்பபட்டு பேரணி ஆரம்பமாகியது.


இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு கரிநாள் என்ற கோசமும் எழுப்பப்பட்டிருந்தன.

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்குமுறைகளை எதிர்த்தும்,  ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் எமது மண்ணிலிருந்து வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,  தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் இன்றைய சுதந்திரநாளில் அதனை கரிநாளாக கருதி தமிழ் மக்களினால் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பேரெழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.


போராட்டத்தின் ஆரம்பத்தில் பொலிஸார் தடுப்பதற்கு முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடைகளை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டம் ஆரம்பமானது.

இந்த போராட்ட பேரணியானது எதிர்வரும் 7ம் திகதி மட்டக்களப்பு மண்ணில் சிறப்பாக நிறைவடையவுள்ளது.

இதேவேளை சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு யாழ். பண்ணைப் பகுதியில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெறுவதாக தெரியவருகின்றது.


யாழ். பல்கலை மாணவர்களின் பேரணியை தடுக்க குவிந்த பொலிசார் - அனுமதி இல்லை என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு வடக்கிலிருந்து கிழக்கு வரை சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்படும் பேரணி காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்தில் இருந்து கிழக்கு நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது.எனினும் பேரணி ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.அத்துடன் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்திருந்தன.எனினும் போராட்ட பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற கோசம் மாணவர்களால் எழுப்பபட்டு பேரணி ஆரம்பமாகியது.இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு கரிநாள் என்ற கோசமும் எழுப்பப்பட்டிருந்தன.இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்குமுறைகளை எதிர்த்தும்,  ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் எமது மண்ணிலிருந்து வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,  தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் இன்றைய சுதந்திரநாளில் அதனை கரிநாளாக கருதி தமிழ் மக்களினால் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பேரெழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.போராட்டத்தின் ஆரம்பத்தில் பொலிஸார் தடுப்பதற்கு முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடைகளை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டம் ஆரம்பமானது.இந்த போராட்ட பேரணியானது எதிர்வரும் 7ம் திகதி மட்டக்களப்பு மண்ணில் சிறப்பாக நிறைவடையவுள்ளது.இதேவேளை சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு யாழ். பண்ணைப் பகுதியில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெறுவதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement