நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தாதியர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கங்களின் வைத்தியசாலை பணியாளர்களினால் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று (03) காலையுடன் முடிவுக்கு வந்தது.
தமது தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று காலை 6.30 மணிக்கு இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று(02) தீர்மானித்தன.
ஜனாதிபதியின் தலையீட்டின் பேரில் நிதி அமைச்சுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(06) தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் அதில் சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் எதிர்வரும் புதன்கிழமை(07) முதல் மீண்டும் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கும் என சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகிஷ்கரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டது.
வைத்தியர்களுக்கு 35000 DAT கொடுப்பனவை அதிகரித்தது போல தமக்கும் வழங்ககோரி சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் வழமைக்கு திரும்பிய சுகாதார சேவைகள்.samugammedia நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தாதியர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கங்களின் வைத்தியசாலை பணியாளர்களினால் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று (03) காலையுடன் முடிவுக்கு வந்தது.தமது தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று காலை 6.30 மணிக்கு இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று(02) தீர்மானித்தன.ஜனாதிபதியின் தலையீட்டின் பேரில் நிதி அமைச்சுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(06) தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் அதில் சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் எதிர்வரும் புதன்கிழமை(07) முதல் மீண்டும் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கும் என சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.பகிஷ்கரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டது.வைத்தியர்களுக்கு 35000 DAT கொடுப்பனவை அதிகரித்தது போல தமக்கும் வழங்ககோரி சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.