• Nov 26 2024

வடக்கு - கிழக்கில் இன்று முதல் கனமழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!samugammedia

Tamil nila / Dec 15th 2023, 7:01 am
image

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே இன்று காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் இன்று  முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும்,  காற்றுச் சுழற்சி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும்.

இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக இக் கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இம்மழை இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட  மாவட்ட்ங்களின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இக் கனமாழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள  அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். 

வடக்கு - கிழக்கில் இன்று முதல் கனமழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே இன்று காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் இன்று  முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேலும்,  காற்றுச் சுழற்சி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும்.இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.குறிப்பாக இக் கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.இம்மழை இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட  மாவட்ட்ங்களின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இக் கனமாழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள  அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். 

Advertisement

Advertisement

Advertisement