• May 18 2024

விக்கிரகங்களை உருவாக்கக்கூடாது; ரணில் தெரிவித்த கருத்து சிவனுக்கா? புத்தருக்கா? - சிவஞானம் கேள்வி! samugammedia

Chithra / Apr 9th 2023, 3:06 pm
image

Advertisement

அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் குருந்தூர் மற்றும் வெடுக்குநாறி கோவில்கள் தொடர்பான கரத்துகளை தெரிவிக்கமுடியாத நிலை ஏற்படுமென வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வெடுக்குநாறி சிவன் ஆலையத்தை மீள் நிர்மானிப்பதற்காக அண்மையில் சென்றிருந்த இரண்டு தமிழ் அமைச்சர்களாலும் அதனை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் விடத்தில் அரசாங்கத்திற்கு கூடுதலான அழுத்தத்தை கொடுக்கவேண்டும்.

விக்கிரகங்களை புதிதாக உருவாக்ககூடாது என ஜனாதிபதி தெரிவித்த கருத்து யாருக்கு தெரிவிக்கப்பட்ட கருத்து என்று புரியவில்லை. 

ரணில் விக்கிரமசிங்க இரண்டு பக்கமும் சாராமல் நழுவல் போக்குடைய கருத்தை தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.


விக்கிரகங்களை உருவாக்கக்கூடாது; ரணில் தெரிவித்த கருத்து சிவனுக்கா புத்தருக்கா - சிவஞானம் கேள்வி samugammedia அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் குருந்தூர் மற்றும் வெடுக்குநாறி கோவில்கள் தொடர்பான கரத்துகளை தெரிவிக்கமுடியாத நிலை ஏற்படுமென வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.இன்று யாழில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.வெடுக்குநாறி சிவன் ஆலையத்தை மீள் நிர்மானிப்பதற்காக அண்மையில் சென்றிருந்த இரண்டு தமிழ் அமைச்சர்களாலும் அதனை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் விடத்தில் அரசாங்கத்திற்கு கூடுதலான அழுத்தத்தை கொடுக்கவேண்டும்.விக்கிரகங்களை புதிதாக உருவாக்ககூடாது என ஜனாதிபதி தெரிவித்த கருத்து யாருக்கு தெரிவிக்கப்பட்ட கருத்து என்று புரியவில்லை. ரணில் விக்கிரமசிங்க இரண்டு பக்கமும் சாராமல் நழுவல் போக்குடைய கருத்தை தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement