• May 06 2024

வவுனியாவில் சட்டவிரோத காடழிப்பு: பொது மக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு samugammedia

Chithra / Apr 24th 2023, 7:35 pm
image

Advertisement

வவுனியா - ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வன இலாகாவுக்கு சொந்தமான  12 ஏக்கர்  காட்டுப்பகுதி கடந்த சில நாட்களாக கிராம அலுவலர் இருவரின் ஆதரவுடன் அழிக்கப்பட்டு வருகின்றது என அப்பகுதி கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரண்டு கிராம அலுவலர்களின் பிரசன்னத்துடன் குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.


இதேவேளை அங்கு விரைந்த கிராம மக்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு முறைப்பாடு விடுத்திருந்தும் பொலிஸார் பொது முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பகுதியானது வரைபடத்தில் காட்டுப் பகுதியாக காணப்படுகின்ற போதும் எவருடைய அனுமதியும் பெறப்படாது சில அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபடுகின்றார்களா அல்லது காடழிப்புக்கு துணை போகின்றார்களா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் இது தொடர்பில் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், வனஇலாகா ஆகியோருக்கும் கிராம மக்களால் இன்று எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   


வவுனியாவில் சட்டவிரோத காடழிப்பு: பொது மக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு samugammedia வவுனியா - ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வன இலாகாவுக்கு சொந்தமான  12 ஏக்கர்  காட்டுப்பகுதி கடந்த சில நாட்களாக கிராம அலுவலர் இருவரின் ஆதரவுடன் அழிக்கப்பட்டு வருகின்றது என அப்பகுதி கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இந்நிலையில், நேற்றைய தினம் இரண்டு கிராம அலுவலர்களின் பிரசன்னத்துடன் குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.இதேவேளை அங்கு விரைந்த கிராம மக்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு முறைப்பாடு விடுத்திருந்தும் பொலிஸார் பொது முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.குறித்த பகுதியானது வரைபடத்தில் காட்டுப் பகுதியாக காணப்படுகின்ற போதும் எவருடைய அனுமதியும் பெறப்படாது சில அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபடுகின்றார்களா அல்லது காடழிப்புக்கு துணை போகின்றார்களா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும் இது தொடர்பில் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், வனஇலாகா ஆகியோருக்கும் கிராம மக்களால் இன்று எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement