• Jul 03 2024

இந்தியாவின் முக்கிய பிரதிநிதி நாளை இலங்கைக்கு விஜயம்!

Sharmi / Jan 18th 2023, 9:34 am
image

Advertisement

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று ஆரம்பிக்கிறார்.

இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த விஜயம் அமையவுள்ளதென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெய்சங்கர் இன்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இதனையடுத்து, நாளையதினம் இலங்கைக்கு பயணிக்கும் ஜெய்சங்கர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவார் எனவும், இரண்டு முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகளிலும் அவர் கைச்சாத்திடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவின் முக்கிய பிரதிநிதி நாளை இலங்கைக்கு விஜயம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று ஆரம்பிக்கிறார்.இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த விஜயம் அமையவுள்ளதென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெய்சங்கர் இன்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதனையடுத்து, நாளையதினம் இலங்கைக்கு பயணிக்கும் ஜெய்சங்கர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவார் எனவும், இரண்டு முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகளிலும் அவர் கைச்சாத்திடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement