• Nov 26 2024

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்...!samugammedia

Sharmi / Dec 23rd 2023, 10:51 am
image

கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம்(22) யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். போதனா வைத்தியசாலையின்  சேவைகள் மற்றும்  செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் நேற்றையதினம்(22) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

புதிதாக நியமனம் பெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக சபையினருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் கலந்துரையாடினார்.

குறிப்பாக வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்திய தாதிகள் உட்பட்ட  ஆளனிப் பற்றாக்குறை மற்றும்  அதனை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோன்று, கட்டிட வசதிகள் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில், தற்போது கட்டப்பட்டு வருகின்ற 6 மாடி கட்டிடத் தொகுதியின் வேலைகளை பூரத்தி செய்வதற்கு குறைந்த பட்சம் 800 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும், தற்போது 400 மில்லின் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 400 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அதைவிட புதிதாக காணிகளை கொள்வனவு செய்து வைத்தியசாலையை விரிவுபடுத்த வேண்டிய தேவை தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும், தட்டுப்பாடாக உள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்தல், ஆய்வுகூட வசதிகள் விஸ்தரித்தல், தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான ஒரு பிரிவு உருவாக்குதல்  உட்பட பல்வேறு நிவர்த்திக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அதேபோன்று, வெளிநோயாளர் பிரிவின் சேவை நேரத்தினை அதிகரிப்பது உட்பட மக்களுக்கான சேவை விஸ்தரிப்பது, வைத்தியசாலை வளாகத்தினை சுற்றி அமைந்துள்ள கழிவுநீர் வடிகான்களை சுகாதார முறைப்படி பேணுதல்  உட்பட பல்வேறு விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிலையில்  கருத்துரைத்த அமைச்சர்,

விரைவில் ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொள்ள இருப்பதால், முக்கியமான விடயங்களை  அடையாளப்படுத்தி அறிக்கை ஒன்றை தயாரித்தால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாழ். போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்.samugammedia கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம்(22) யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ். போதனா வைத்தியசாலையின்  சேவைகள் மற்றும்  செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் நேற்றையதினம்(22) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.புதிதாக நியமனம் பெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக சபையினருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் கலந்துரையாடினார்.குறிப்பாக வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்திய தாதிகள் உட்பட்ட  ஆளனிப் பற்றாக்குறை மற்றும்  அதனை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.அதேபோன்று, கட்டிட வசதிகள் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில், தற்போது கட்டப்பட்டு வருகின்ற 6 மாடி கட்டிடத் தொகுதியின் வேலைகளை பூரத்தி செய்வதற்கு குறைந்த பட்சம் 800 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும், தற்போது 400 மில்லின் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 400 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதைவிட புதிதாக காணிகளை கொள்வனவு செய்து வைத்தியசாலையை விரிவுபடுத்த வேண்டிய தேவை தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தட்டுப்பாடாக உள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்தல், ஆய்வுகூட வசதிகள் விஸ்தரித்தல், தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான ஒரு பிரிவு உருவாக்குதல்  உட்பட பல்வேறு நிவர்த்திக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.அதேபோன்று, வெளிநோயாளர் பிரிவின் சேவை நேரத்தினை அதிகரிப்பது உட்பட மக்களுக்கான சேவை விஸ்தரிப்பது, வைத்தியசாலை வளாகத்தினை சுற்றி அமைந்துள்ள கழிவுநீர் வடிகான்களை சுகாதார முறைப்படி பேணுதல்  உட்பட பல்வேறு விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.இந்நிலையில்  கருத்துரைத்த அமைச்சர், விரைவில் ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொள்ள இருப்பதால், முக்கியமான விடயங்களை  அடையாளப்படுத்தி அறிக்கை ஒன்றை தயாரித்தால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement