• May 05 2024

யாழின் முக்கிய பகுதியில் வெள்ளை வானில் வந்த மர்ம நபர்கள்...! நடந்தது என்ன? samugammedia

Sharmi / Oct 30th 2023, 1:14 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமாராட்சி  கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற  சிலரால் அங்குள்ள வீடொன்றில் புகுந்து அவர்களை அச்சுறுத்தி வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் நேற்று இரவு 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

KDH ரக ஹயஸ்  வாகனத்தில் சென்றிருந்தவர்களால்  பருத்தித்துறை பிரதேச சபையில் பணியாற்றிவரும்  உத்தியோகத்தரின் வீட்டுக்குள் சென்று உங்களுடைய அடையாள  ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்து அவற்றை பார்வையிட்டதுடன் அவர்களது தொலைபேசிகளும்  பறிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த வீட்டின் குடும்பஸ்தர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த  ஆவணங்கள்,  சோதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பையில் இருந்த 5 லட்சம்  ரூபாய் பணம்,  மற்றும் ஆறரை பவுன் தங்க  நகைகளும்  குறித்த நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான  விசாரணைகளை மருதங்கேணி பொலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




யாழின் முக்கிய பகுதியில் வெள்ளை வானில் வந்த மர்ம நபர்கள். நடந்தது என்ன samugammedia யாழ்ப்பாணம் வடமாராட்சி  கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற  சிலரால் அங்குள்ள வீடொன்றில் புகுந்து அவர்களை அச்சுறுத்தி வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.குறித்த  சம்பவம் நேற்று இரவு 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.KDH ரக ஹயஸ்  வாகனத்தில் சென்றிருந்தவர்களால்  பருத்தித்துறை பிரதேச சபையில் பணியாற்றிவரும்  உத்தியோகத்தரின் வீட்டுக்குள் சென்று உங்களுடைய அடையாள  ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்து அவற்றை பார்வையிட்டதுடன் அவர்களது தொலைபேசிகளும்  பறிக்கப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த வீட்டின் குடும்பஸ்தர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த  ஆவணங்கள்,  சோதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பையில் இருந்த 5 லட்சம்  ரூபாய் பணம்,  மற்றும் ஆறரை பவுன் தங்க  நகைகளும்  குறித்த நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.குறித்த  சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான  விசாரணைகளை மருதங்கேணி பொலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement