• May 06 2024

இந்த நாட்டில் பொறுப்பும் இல்லை, பொறுப்பு கூறலும் இல்லை - இன்றைய அமர்வில் ரொஷான் எம்.பி. குற்றச்சாட்டு..! samugammedia

Tharun / Nov 17th 2023, 8:56 pm
image

Advertisement

ஜனாதிபதி தன்னால் முடிந்த அளவுக்கு நாட்டை கொண்டு  வந்து இருக்கிறார். இந்த இடத்திலிருந்து நாங்களும் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள்  மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார் 

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு  திட்டத்தின் இன்றைய நாள் விவாதத்தின் போதே அவர் எவ்வாறு தெரிவித்துள்ளார் 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

நாட்டை முன்னேற்றுவதற்கு தேசிய கொள்கை அவசியம். அதனை கொண்டு வர வேண்டிய கால கட்டம் இதுவாகும்.  அப்படி கொண்டு வராவிட்டால் நாங்கள் முன்னோக்கி செல்ல முடியாது. அது இல்லாவிட்டால் பாராளுமன்றம் பிரயோசனம் அற்றதாக ஆகிவிடும். பொறுப்பு கூறல் இந்நாட்டில் இருக்கிறதா? இந்த நாட்டில் பொறுப்பும் இல்லை பொறுப்பு கூறலும் இல்லை. தண்டனையும் இல்லை. இந்நிலை மாற வேண்டும். 

முதலீடுகள் பற்றி சொல்ல வேண்டும். சீனா  பற்றி பார்க்கும் போது  சீனா  மொத்த  தேசிய உற்பத்தியில் 40 வீதம் சேவை துறையில் எட்டப்படுகிறது அது போல நாங்களும் சேவைத்துறையில் ஈடுபட வேண்டும் . அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க முடியும். 

பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது பின்பு இடைநிறுத்தப்பட்டது. அதனை மீள செய்வதற்கு செலவுகள் அதிகரித்துள்ளது. ஆகவே திட்டங்கள் எதுவும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. 

அரச முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் தீர்மானம் எடுப்பதில் தயங்கி கொண்டு இருக்கிறோம். மேலே இருக்கிற நாங்கள் சரியான  முறையில் பயணித்தால் மக்களும் சரியாக பயணிப்பார்கள். நாட்டை கட்டியெழுப்ப ஒட்டுமொத்த மக்களும் உழைக்க வேண்டும் ஜனாதிபதி தன்னால் முடிந்த அளவுக்கு நாட்டை கொண்டு  வந்து இருக்கிறார். இந்த இடத்திலிருந்து நாங்களும் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும்.  எதிர்காலத்தில் எவ்வாறு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமென்று நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.  என தெரிவித்துள்ளார் 

இந்த நாட்டில் பொறுப்பும் இல்லை, பொறுப்பு கூறலும் இல்லை - இன்றைய அமர்வில் ரொஷான் எம்.பி. குற்றச்சாட்டு. samugammedia ஜனாதிபதி தன்னால் முடிந்த அளவுக்கு நாட்டை கொண்டு  வந்து இருக்கிறார். இந்த இடத்திலிருந்து நாங்களும் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள்  மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு  திட்டத்தின் இன்றைய நாள் விவாதத்தின் போதே அவர் எவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டை முன்னேற்றுவதற்கு தேசிய கொள்கை அவசியம். அதனை கொண்டு வர வேண்டிய கால கட்டம் இதுவாகும்.  அப்படி கொண்டு வராவிட்டால் நாங்கள் முன்னோக்கி செல்ல முடியாது. அது இல்லாவிட்டால் பாராளுமன்றம் பிரயோசனம் அற்றதாக ஆகிவிடும். பொறுப்பு கூறல் இந்நாட்டில் இருக்கிறதா இந்த நாட்டில் பொறுப்பும் இல்லை பொறுப்பு கூறலும் இல்லை. தண்டனையும் இல்லை. இந்நிலை மாற வேண்டும். முதலீடுகள் பற்றி சொல்ல வேண்டும். சீனா  பற்றி பார்க்கும் போது  சீனா  மொத்த  தேசிய உற்பத்தியில் 40 வீதம் சேவை துறையில் எட்டப்படுகிறது அது போல நாங்களும் சேவைத்துறையில் ஈடுபட வேண்டும் . அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க முடியும். பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது பின்பு இடைநிறுத்தப்பட்டது. அதனை மீள செய்வதற்கு செலவுகள் அதிகரித்துள்ளது. ஆகவே திட்டங்கள் எதுவும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அரச முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் தீர்மானம் எடுப்பதில் தயங்கி கொண்டு இருக்கிறோம். மேலே இருக்கிற நாங்கள் சரியான  முறையில் பயணித்தால் மக்களும் சரியாக பயணிப்பார்கள். நாட்டை கட்டியெழுப்ப ஒட்டுமொத்த மக்களும் உழைக்க வேண்டும் ஜனாதிபதி தன்னால் முடிந்த அளவுக்கு நாட்டை கொண்டு  வந்து இருக்கிறார். இந்த இடத்திலிருந்து நாங்களும் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும்.  எதிர்காலத்தில் எவ்வாறு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமென்று நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.  என தெரிவித்துள்ளார் 

Advertisement

Advertisement

Advertisement