அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.
இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைதீவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம்- 7 பேர் மாயம். அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.