• Nov 24 2024

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு- காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்..!

Sharmi / Sep 25th 2024, 3:22 pm
image

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் பதவியேற்றதை தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அமைச்சு அதிகாரிகள் வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த அமைச்சு வளாகத்திலும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திலும் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

புதிய ஆட்சியின் பின்னர் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

அந்தவகையில்,நேற்றையதினமும் இவ்வாறு வாகனங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நிலையில், இன்றும் பல்வேறு வாகனங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளன.

அதேவேளை அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருப்பி கையளிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதியே இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 833 வாகனங்களில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், 253 வாகனங்கள் வெளிப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு- காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள். இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் பதவியேற்றதை தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அமைச்சு அதிகாரிகள் வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.குறித்த அமைச்சு வளாகத்திலும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திலும் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.புதிய ஆட்சியின் பின்னர் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.அந்தவகையில்,நேற்றையதினமும் இவ்வாறு வாகனங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நிலையில், இன்றும் பல்வேறு வாகனங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளன.அதேவேளை அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இவ்வாறு திருப்பி கையளிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதியே இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 833 வாகனங்களில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், 253 வாகனங்கள் வெளிப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement