• May 06 2024

தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்த ரணில்: ரில்வின் சில்வா குற்றச்சாட்டு!SamugamMedia

Sharmi / Feb 24th 2023, 3:41 pm
image

Advertisement

நீதிமன்றம் தேர்தல் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன்னரே தேர்தலை நடத்தப்போவதில்லை என அறிவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தமைக்காக ஜனாதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக இன்று முதல் மக்கள் படையொன்று அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில், தீர்மானத்தை வழங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் அவர் கூறுகின்றார்.

தேர்தலுக்கு பயந்துதான் ஜனாதிபதி இவ்வாறு கூறுகின்றார் என்றும் பணப்பிரச்சினை இல்லை என்பதற்காக அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்த ரணில்: ரில்வின் சில்வா குற்றச்சாட்டுSamugamMedia நீதிமன்றம் தேர்தல் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன்னரே தேர்தலை நடத்தப்போவதில்லை என அறிவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தமைக்காக ஜனாதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கு எதிராக இன்று முதல் மக்கள் படையொன்று அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில், தீர்மானத்தை வழங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் அவர் கூறுகின்றார்.தேர்தலுக்கு பயந்துதான் ஜனாதிபதி இவ்வாறு கூறுகின்றார் என்றும் பணப்பிரச்சினை இல்லை என்பதற்காக அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement