• May 06 2024

அரச செலவை மட்டுப்படுத்த சொல்லும் ரணில் - சுதந்திர தினத்திற்கு 17 கோடி ரூபாவினை செலவு செய்கிறார்.!

Sharmi / Feb 2nd 2023, 10:36 am
image

Advertisement

நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் சுதந்திர தினத்திற்கு 17 கோடி ரூபாவினை செலவு செய்வதை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும வலியுறுத்தியுள்ளார்.

நாவல பகுதியில் அமைந்துள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

75 ஆவது சுதந்திர தினத்தை கௌரவமான முறையில் விமர்சையாக கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

நாட்டு மக்கள் இந்த சுதந்திரத்தை எவ்வாறு கொண்டாடுவார்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை என்றும் டலஸ் அழகபெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திர தினத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விசேட தேவையுடைய மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதி அந்நாட்டு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளமை முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துள்ளது.

அரச நிதி சேமிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்சானியா நாட்டு ஜனாதிபதியை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

அரச செலவுகளை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டம் எதனையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறியவில்லை என்றும் டலஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.

அரச செலவை மட்டுப்படுத்த சொல்லும் ரணில் - சுதந்திர தினத்திற்கு 17 கோடி ரூபாவினை செலவு செய்கிறார். நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் சுதந்திர தினத்திற்கு 17 கோடி ரூபாவினை செலவு செய்வதை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும வலியுறுத்தியுள்ளார்.நாவல பகுதியில் அமைந்துள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.75 ஆவது சுதந்திர தினத்தை கௌரவமான முறையில் விமர்சையாக கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். நாட்டு மக்கள் இந்த சுதந்திரத்தை எவ்வாறு கொண்டாடுவார்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை என்றும் டலஸ் அழகபெரும குற்றம் சுமத்தியுள்ளார்.சுதந்திர தினத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விசேட தேவையுடைய மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதி அந்நாட்டு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளமை முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துள்ளது. அரச நிதி சேமிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்சானியா நாட்டு ஜனாதிபதியை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.அரச செலவுகளை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டம் எதனையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறியவில்லை என்றும் டலஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement