• May 06 2024

மடிக்கணினிகளுடன் நாட்டை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்க..!samugammedia

Sharmi / May 12th 2023, 12:40 pm
image

Advertisement

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்க புத்தம் புதிய மடிக்கணினிகளுடன் இன்று -12- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வந்தடைந்தார்.

சிங்கப்பூர், அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள ஆதரவாளர்களால் மொத்தம் 250 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து மேலதிகமாக 10,000 மடிக்கணினிகள் பெறப்படும் என்றும் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், க .பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (IT) படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இம் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.

மடிக்கணினிகள் இறுதியில் தேவைப்படும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.

தனது தொண்டு நிகழ்ச்சிக்காக மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கியவர்களுக்கு ராமநாயக்க நன்றி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரலில், பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 116 மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டன, மேலும் கிராமப்புற மாணவர்களுக்கும் 23 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மடிக்கணினிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு வரிச்சலுகைகளை வழங்கிய இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும் ,நன்கொடைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மடிக்கணினிகளுடன் நாட்டை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்க.samugammedia பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்க புத்தம் புதிய மடிக்கணினிகளுடன் இன்று -12- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வந்தடைந்தார்.சிங்கப்பூர், அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள ஆதரவாளர்களால் மொத்தம் 250 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து மேலதிகமாக 10,000 மடிக்கணினிகள் பெறப்படும் என்றும் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், க .பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (IT) படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இம் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.மடிக்கணினிகள் இறுதியில் தேவைப்படும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.தனது தொண்டு நிகழ்ச்சிக்காக மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கியவர்களுக்கு ராமநாயக்க நன்றி தெரிவித்தார்.கடந்த ஏப்ரலில், பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 116 மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டன, மேலும் கிராமப்புற மாணவர்களுக்கும் 23 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மடிக்கணினிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு வரிச்சலுகைகளை வழங்கிய இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும் ,நன்கொடைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement