• May 18 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக ரொஷான்..? எம்.பி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

Chithra / Nov 30th 2023, 11:35 am
image

Advertisement


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பொது எதிரணி வேட்பாளராக நிறுத்தும் முடிவை நாங்கள் மாற்ற மாட்டோம் என  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

ஜனாதிபதி பதவிக்கு வெளியாட்களை போட்டியிட வைக்கும் கொள்கை ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை, என்று அவர் கூறினார்.

பிரேமதாச ஏன் கடந்த வருடம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என வினவியபோது, ​​

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினர்  மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு  எமது தலைவர் செவிசாய்த்ததாகவும், 

அப்போது ஜனாதிபதியாக வருவதற்கு அவருக்கு சபையில் போதிய வாக்குகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களைச் செய்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா முன்மொழிந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக ரொஷான். எம்.பி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பொது எதிரணி வேட்பாளராக நிறுத்தும் முடிவை நாங்கள் மாற்ற மாட்டோம் என  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.ஜனாதிபதி பதவிக்கு வெளியாட்களை போட்டியிட வைக்கும் கொள்கை ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை, என்று அவர் கூறினார்.பிரேமதாச ஏன் கடந்த வருடம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என வினவியபோது, ​​பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினர்  மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு  எமது தலைவர் செவிசாய்த்ததாகவும், அப்போது ஜனாதிபதியாக வருவதற்கு அவருக்கு சபையில் போதிய வாக்குகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களைச் செய்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா முன்மொழிந்தார்.

Advertisement

Advertisement

Advertisement