• May 06 2024

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Jun 9th 2023, 9:17 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசி அல்லது சாதனங்களை வழங்க முடியாது என சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், முன்னர் 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அடிப்படை கையடக்கத் தொலைபேசியானது, தற்போதும் 4,500 ரூபா என்ற வரம்பில் உள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் பின்னர் பாரியளவிலான இறக்குமதியாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் சிறு விற்பனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசி அல்லது சாதனங்களை வழங்க முடியாது என சங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன், முன்னர் 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அடிப்படை கையடக்கத் தொலைபேசியானது, தற்போதும் 4,500 ரூபா என்ற வரம்பில் உள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் பின்னர் பாரியளவிலான இறக்குமதியாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் சிறு விற்பனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement