• May 06 2024

சிலாபம் முன்னேஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா! SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 12:02 pm
image

Advertisement

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ  முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று(06) இடம்பெற்றது.



ஆலய பிரதான குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ.எஸ்.பந்தநாகக் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் காலை 9.00 மணியளவில் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ  முன்னைநாதஸ்சுவாமி ஆகியோருக்கு வசந்த மண்ப பூஜை இடம் பெற்றது.



பின்னர் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ  முன்னைநாதஸ்சுவாமி ஆகியோர் உள் வீதி வலம் வந்தது.

அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் ஆரோகரிக்கப்பட்டு பக்தர்கள் புடை சூழ ”அரோகரா” என்ற நாமம் ஒலிக்க மங்கள வாத்தியம் முழங்க தேர்த் திருவிழா இடம்பெற்றது.



இன்றைய தேர்த் திருவிழாவில் நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்தும் இன,மத,பேதமின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவங்கள் தொடர்ந்து 10  நாட்கள் இடம் பெற்று வந்தது. இதில் சந்திரகலாதர உற்சவம்,நடராஜ உற்வசம்,சிவபக்த உற்சவம்,திருக்கல்யாண உற்சவம்,பிசஷாடா உற்சவம்,மிருக யாத்திரா உற்சவம் ஆகிய முக்கிய உற்சவங்கள் இடம் பெற்ற நிலையில் நாளை (07) தீர்த்த உற்சவத்துடன் பிரம்மோற்சவம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.






சிலாபம் முன்னேஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா SamugamMedia பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ  முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று(06) இடம்பெற்றது.ஆலய பிரதான குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ.எஸ்.பந்தநாகக் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் காலை 9.00 மணியளவில் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ  முன்னைநாதஸ்சுவாமி ஆகியோருக்கு வசந்த மண்ப பூஜை இடம் பெற்றது.பின்னர் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ  முன்னைநாதஸ்சுவாமி ஆகியோர் உள் வீதி வலம் வந்தது.அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் ஆரோகரிக்கப்பட்டு பக்தர்கள் புடை சூழ ”அரோகரா” என்ற நாமம் ஒலிக்க மங்கள வாத்தியம் முழங்க தேர்த் திருவிழா இடம்பெற்றது.இன்றைய தேர்த் திருவிழாவில் நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்தும் இன,மத,பேதமின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவங்கள் தொடர்ந்து 10  நாட்கள் இடம் பெற்று வந்தது. இதில் சந்திரகலாதர உற்சவம்,நடராஜ உற்வசம்,சிவபக்த உற்சவம்,திருக்கல்யாண உற்சவம்,பிசஷாடா உற்சவம்,மிருக யாத்திரா உற்சவம் ஆகிய முக்கிய உற்சவங்கள் இடம் பெற்ற நிலையில் நாளை (07) தீர்த்த உற்சவத்துடன் பிரம்மோற்சவம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement