• Jan 08 2025

சிறைக் கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

Chithra / Dec 25th 2024, 9:36 am
image


நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறைக் கைதிகளை பார்வையிட விசேட அனுமதி நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement