• Jul 03 2024

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்! samugammedia

Tamil nila / Sep 6th 2023, 7:50 am
image

Advertisement

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வௌியிடப்பட்ட உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய வணிகப் பிரிவில், கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயத்தின் தில்சரணி தருஷிகா நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் மனெத் பனுல பெரேரா இம்முறை கணித பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் ப்ரமுதி பாஷனீ முதலிடம் பெற்றுள்ளார்.

கேகாலை புனித ஜோசப் பாலிகா வித்தியாலய மாணவியான சச்சினி சத்சரணி, கலைப்பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தைச் சேர்ந்த சமுதித்த நயனப்ரிய, பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொறியியல் பாடப்பிரிவில் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ருச்சினி அஹிங்சா நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் samugammedia 2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.வௌியிடப்பட்ட உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய வணிகப் பிரிவில், கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயத்தின் தில்சரணி தருஷிகா நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.கொழும்பு றோயல் கல்லூரியின் மனெத் பனுல பெரேரா இம்முறை கணித பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் ப்ரமுதி பாஷனீ முதலிடம் பெற்றுள்ளார்.கேகாலை புனித ஜோசப் பாலிகா வித்தியாலய மாணவியான சச்சினி சத்சரணி, கலைப்பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தைச் சேர்ந்த சமுதித்த நயனப்ரிய, பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பொறியியல் பாடப்பிரிவில் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ருச்சினி அஹிங்சா நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement