இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பிரின் பிரதாபன், தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின் 20வது தொடர் முடிவில் வெற்றிபெற்று, மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.
இந்நிலையில், நடுவர்களான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோரால் மாஸ்டர்செஃப் கிண்ணம் பிரினுக்கு வழங்கப்பட்டது.
இதன்படி, மாஸ்டர்செஃப் வரலாற்றின் ஒரு அங்கமாகி 29வயதாக பிரின், இரண்டு தசாப்தகால சிறந்த செம்பியன்களுடன் இணைந்துள்ளார்.
எட்டு வாரங்கள் கடினமான சவால்களுக்குப் பின் 57 சமையல் போட்டியாளர்களை கடந்து, பிரின் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் குறிப்பிட்டுள்ளார்.
அற்புதமான, காரமான சமையல் பின்னணியை தமது பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது சமையல் பகுதிகள் உண்மையிலேயே இலங்கையின் தமிழ் இலங்கை பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று பிரின் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் மதிப்புமிக்க மாஸ்டர்செப் விருதை வென்ற இலங்கைத் தமிழன். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பிரின் பிரதாபன், தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின் 20வது தொடர் முடிவில் வெற்றிபெற்று, மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.இந்நிலையில், நடுவர்களான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோரால் மாஸ்டர்செஃப் கிண்ணம் பிரினுக்கு வழங்கப்பட்டது.இதன்படி, மாஸ்டர்செஃப் வரலாற்றின் ஒரு அங்கமாகி 29வயதாக பிரின், இரண்டு தசாப்தகால சிறந்த செம்பியன்களுடன் இணைந்துள்ளார்.எட்டு வாரங்கள் கடினமான சவால்களுக்குப் பின் 57 சமையல் போட்டியாளர்களை கடந்து, பிரின் வெற்றி பெற்றுள்ளார்.இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான, காரமான சமையல் பின்னணியை தமது பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமது சமையல் பகுதிகள் உண்மையிலேயே இலங்கையின் தமிழ் இலங்கை பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று பிரின் குறிப்பிட்டுள்ளார்.