பண்டிகை காலங்களிலே பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது. அனைத்து பொருட்களுக்கும் வரி அறவீடு அதிகரித்தே காணப்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பெண்கள் அணித் தலைவி உமாதேவி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிறுவர்களுக்கு சத்துணவு கொடுக்கும் சூழல் தற்போது இலங்கை தேசத்தில் காணப்படவில்லை. கடந்த வருடத்துடன் இந்த வருடத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் குறைவானவர்களாகவே காணப்படுகின்றனர்.
தற்போதைய காலப்பகுதியில் இலங்கையில் வாழும் மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பண்டிகைகளை கொண்டாட முடியாத நிலையில் திண்டாடும் இலங்கை மக்கள். உமாதேவி ஆதங்கம்.samugammedia பண்டிகை காலங்களிலே பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது. அனைத்து பொருட்களுக்கும் வரி அறவீடு அதிகரித்தே காணப்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பெண்கள் அணித் தலைவி உமாதேவி தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு சத்துணவு கொடுக்கும் சூழல் தற்போது இலங்கை தேசத்தில் காணப்படவில்லை. கடந்த வருடத்துடன் இந்த வருடத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் குறைவானவர்களாகவே காணப்படுகின்றனர். தற்போதைய காலப்பகுதியில் இலங்கையில் வாழும் மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.