• May 06 2024

தேர்தலில் களமிறங்கும் இலங்கை பழங்குடியின சமூகம்!

Chithra / Dec 25th 2022, 3:29 pm
image

Advertisement

இலங்கையின் பழங்குடியின சமூகம் எதிர்கால தேர்தல்களில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடத் தயார் என ஆதிவாசித் தலைவர் உருவரிகே வன்னிலாஎத்தோ தெரிவித்துள்ளார்.


இதற்காக தகுதியான இளைஞர்களை தெரிவு செய்யுமாறு தாம் ஆதிவாசித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அம்பாறை, வாகரை, பொல்பெத்த பகுதிகளைச் சேர்ந்த ஆதிவாசித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக ஊடகமொன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது குடும்பத்தினர் போட்டியிடும் திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆதிவாசி மக்களின் பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் உரிய பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியானவர்கள் தமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


தேர்தலில் களமிறங்கும் இலங்கை பழங்குடியின சமூகம் இலங்கையின் பழங்குடியின சமூகம் எதிர்கால தேர்தல்களில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடத் தயார் என ஆதிவாசித் தலைவர் உருவரிகே வன்னிலாஎத்தோ தெரிவித்துள்ளார்.இதற்காக தகுதியான இளைஞர்களை தெரிவு செய்யுமாறு தாம் ஆதிவாசித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதன்படி, அம்பாறை, வாகரை, பொல்பெத்த பகுதிகளைச் சேர்ந்த ஆதிவாசித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக ஊடகமொன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது குடும்பத்தினர் போட்டியிடும் திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆதிவாசி மக்களின் பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் உரிய பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியானவர்கள் தமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement