• Nov 25 2024

இலங்கையின் புதிய பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Chithra / Oct 10th 2024, 12:07 pm
image

 

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று  முற்பகல் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

2011ஆம் ஆண்டு பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பிறகு இலங்கையின் வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆவார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக இணைந்து கொண்ட பெர்னாண்டோ, 30 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், இவர் சிரேஷ்ட அரச சட்டத்தரணி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்.


இலங்கையின் புதிய பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்  இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று  முற்பகல் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.2011ஆம் ஆண்டு பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பிறகு இலங்கையின் வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆவார்.சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக இணைந்து கொண்ட பெர்னாண்டோ, 30 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றியுள்ளார்.அத்துடன், இவர் சிரேஷ்ட அரச சட்டத்தரணி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement