• May 06 2024

வானிலையில் திடீர் மாற்றம் - இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்குள் நுழையும் தாழமுக்கம்!

Chithra / Dec 26th 2022, 6:45 am
image

Advertisement

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்குள் நுழைந்துள்ள தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்துள்ளது.

இந்நிலையில், தாழமுக்கம் இன்று (26) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கிணங்க, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும்(06N – 14N, 78E – 85E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மீனவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


வானிலையில் திடீர் மாற்றம் - இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்குள் நுழையும் தாழமுக்கம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்குள் நுழைந்துள்ள தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்துள்ளது.இந்நிலையில், தாழமுக்கம் இன்று (26) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கிணங்க, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.எனவே, நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும்(06N – 14N, 78E – 85E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதற்கமைய, மீனவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement