• Nov 26 2024

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணிலை ஆதரிக்க வேண்டும்- இன்பராசா வேண்டுகோள்..!

Sharmi / Aug 24th 2024, 2:13 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் சிலிண்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வவுனியாவில் இன்றையதினம்(24)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா இவ்வாறு தெரிவித்தார்.

தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தோம்.

இதன்போது தமது கோரிக்கைகளை  ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ,  நிச்சயமாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தன் பிரகாரம், தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்

மேலும் கோரிக்கைகளாக, வடக்கு கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், வீணாக போராளிகளை அழைத்து விசாரணைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்,

வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு தங்களூடாக உதவித் திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை தாம் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்

இதேவேளை கடந்த காலங்களில் ரணில் ஒரு தந்திரவாதி என தெரிந்து கொண்டுமே அவருடன் பேச்சுவார்த்தைக்கு அன்ரன் பாலசிங்கம் வி/..டுத..லைப் பு..லி...களை அழைத்துச் சென்றிருந்தார்.

ஆகவே, தாமும் அந்த ரீதியிலேயே அவருக்கு ஆதரவை கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாக தெரிவித்ததுடன், தமிழ் மக்கள் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடைய வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணிலை ஆதரிக்க வேண்டும்- இன்பராசா வேண்டுகோள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் சிலிண்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் வவுனியாவில் இன்றையதினம்(24)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா இவ்வாறு தெரிவித்தார்.தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தோம். இதன்போது தமது கோரிக்கைகளை  ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ,  நிச்சயமாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தன் பிரகாரம், தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்மேலும் கோரிக்கைகளாக, வடக்கு கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், வீணாக போராளிகளை அழைத்து விசாரணைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்,வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு தங்களூடாக உதவித் திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை தாம் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்இதேவேளை கடந்த காலங்களில் ரணில் ஒரு தந்திரவாதி என தெரிந்து கொண்டுமே அவருடன் பேச்சுவார்த்தைக்கு அன்ரன் பாலசிங்கம் வி/.டுத.லைப் பு.லி.களை அழைத்துச் சென்றிருந்தார். ஆகவே, தாமும் அந்த ரீதியிலேயே அவருக்கு ஆதரவை கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாக தெரிவித்ததுடன், தமிழ் மக்கள் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடைய வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement