• May 06 2024

வடக்கு, கிழக்கில் உள்ள விகாரைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: அஸ்கிரி மகாநாயக்கர் ஜனாதிபதியிடம் கோரிக்கை! samugammedia

Tamil nila / May 20th 2023, 11:27 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு சென்ற  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரையும் சந்தித்துள்ளார்.

கடந்த வெசாக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான சமூகப் பின்னணியை உருவாக்கியமைக்காக அஸ்கிரி மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு தமது பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அஸ்கிரி மகாநாயக்கர் கடிதமொன்றினையும் கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள வரலாற்று சிறப்புமிக்க வணக்கஸ்தலங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்துடன், தற்போது பல்வேறு மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் தொல்லியல் தொடர்பான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு வெளித்தரப்பினர் வழங்கும் உதவிகளை பயன்படுத்த வேண்டுமெனவும் அந்தக் கடிததத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களால் இனவாத மற்றும் மதவாத நெருக்கடிகள் உருவாவதாகவும், அந்தச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள விகாரைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: அஸ்கிரி மகாநாயக்கர் ஜனாதிபதியிடம் கோரிக்கை samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு சென்ற  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரையும் சந்தித்துள்ளார்.கடந்த வெசாக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான சமூகப் பின்னணியை உருவாக்கியமைக்காக அஸ்கிரி மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு தமது பாராட்டுகளை தெரிவித்தனர்.இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அஸ்கிரி மகாநாயக்கர் கடிதமொன்றினையும் கையளித்தார்.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள வரலாற்று சிறப்புமிக்க வணக்கஸ்தலங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது பல்வேறு மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் தொல்லியல் தொடர்பான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு வெளித்தரப்பினர் வழங்கும் உதவிகளை பயன்படுத்த வேண்டுமெனவும் அந்தக் கடிததத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களால் இனவாத மற்றும் மதவாத நெருக்கடிகள் உருவாவதாகவும், அந்தச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement