• May 05 2024

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும்! – அமைச்சர் டக்ளஸ்

Chithra / Jan 11th 2023, 7:39 am
image

Advertisement

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செயற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலேயே தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என தாம் உறுதியாக நம்புவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தனது நிலைப்பாடுகளை மூன்று கட்டங்களாக வகுத்து அதனை ரணிலிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்த பேச்சுவார்தையில் தனது வகிபாகம் என்பது இரண்டு வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிர்வாக ரீதியாக நீக்கப்பட்ட அதிகாரங்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செயற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்தோடு அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலேயே தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என தாம் உறுதியாக நம்புவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தனது நிலைப்பாடுகளை மூன்று கட்டங்களாக வகுத்து அதனை ரணிலிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்த பேச்சுவார்தையில் தனது வகிபாகம் என்பது இரண்டு வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நிர்வாக ரீதியாக நீக்கப்பட்ட அதிகாரங்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement