• Nov 27 2024

மன்னார் சதொச மனித புதைகுழியை பார்வையிட்ட ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளர்...!

Sharmi / Jun 4th 2024, 2:54 pm
image

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட   ஒருங்கிணைப்பாளர்   மார்க் என்ட்ரோ பிரஞ்ச் ( (Marc-André Franche) இன்றைய தினம்(4) மதியம் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரையும் சந்தித்து மன்னார் மாவட்டத்தின் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதொச மனித புதைகுழி யையும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இதன் போது, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினருடன்  மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகள்,மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரும்  சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் சதொச மனித புதைகுழியை பார்வையிட்ட ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட   ஒருங்கிணைப்பாளர்   மார்க் என்ட்ரோ பிரஞ்ச் ( (Marc-André Franche) இன்றைய தினம்(4) மதியம் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இதன்போது, மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.மேலும், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரையும் சந்தித்து மன்னார் மாவட்டத்தின் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடினர்.அதனைத் தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதொச மனித புதைகுழி யையும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.இதன் போது, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினருடன்  மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகள்,மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரும்  சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement