• May 19 2024

பிரபாகரனின் பிறந்தநாளை அனுஸ்டிக்க இடமளிக்க முடியாது..! எதிர்காலத்தில் கைதுகள் தொடரும்! - பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

Chithra / Dec 6th 2023, 9:55 am
image

Advertisement

  

பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது. எதிர்காலத்தில்  இவ்வாறு செயற்பட்டால் கைதுகள் தொடரும்  என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம். தேசிய பாதுகாப்புக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளித்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

ஆகவே முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என தமிழர் பிரதேசத்துக்கு குறிப்பிடுங்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சர்  தமிழ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மாவீரர் நினேவேந்தல் நிகழ்வன்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

மூன்று நீதிமன்றங்கள் நினைவேந்தலுக்கு தடை விதித்துள்ளன. 

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. 

பிரபாகரனின் பிறந்த தினத்தன்று கொடிகளை ஏந்திக் கொண்டு சென்றவர்கள்,  முரன்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளார்களே கைது செய்யப்பட்டார்கள்.

நினைவேந்தல் நிகழ்வில் பிரகாபரனின் உருவத்திலான கேக், டீசர்ட் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இடமளிக்க முடியாது. 

தமிழ் பிரதிநிதிகள் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை பேசுகிறார்கள். அவ்வாறாயின் அவர்கள் இவ்வாறான தடை செய்யப்பட்ட விடயங்களுக்கு இடமளிக்க கூடாது. அவர்களும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். என்றார்.

பிரபாகரனின் பிறந்தநாளை அனுஸ்டிக்க இடமளிக்க முடியாது. எதிர்காலத்தில் கைதுகள் தொடரும் - பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை   பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது. எதிர்காலத்தில்  இவ்வாறு செயற்பட்டால் கைதுகள் தொடரும்  என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம். தேசிய பாதுகாப்புக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளித்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என தமிழர் பிரதேசத்துக்கு குறிப்பிடுங்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சர்  தமிழ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மாவீரர் நினேவேந்தல் நிகழ்வன்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று நீதிமன்றங்கள் நினைவேந்தலுக்கு தடை விதித்துள்ளன. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. பிரபாகரனின் பிறந்த தினத்தன்று கொடிகளை ஏந்திக் கொண்டு சென்றவர்கள்,  முரன்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளார்களே கைது செய்யப்பட்டார்கள்.நினைவேந்தல் நிகழ்வில் பிரகாபரனின் உருவத்திலான கேக், டீசர்ட் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் பிரதிநிதிகள் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை பேசுகிறார்கள். அவ்வாறாயின் அவர்கள் இவ்வாறான தடை செய்யப்பட்ட விடயங்களுக்கு இடமளிக்க கூடாது. அவர்களும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement