• May 07 2024

வாழைத் தோட்டத்தை அழித்த குண்டர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன..?? மனோ..!samugammedia

Sharmi / Jun 8th 2023, 11:48 am
image

Advertisement

உணவு பற்றாக்குறையை தீர்ப்பதற்கு பல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் அது தற்போதுவரை தீர்க்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மனோ கணேசன் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

குறிப்பாக வீட்டுத்தோட்ட முறைமையின் கீழ் அருகில் உள்ள காணிகளை வழங்குவதாகவும் தோட்ட மக்கள் அதில் மரக்கறிகளை பயிரிடமுடியும் என  அமைச்சர் அறிவித்த போதும் இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தோட்டமக்கள் உணவின்றி அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தோட்ட மக்கள் தற்போது ஒரு நேரம் மட்டுமே உணவை உட்கொள்வதாகவும் எனவே அரசாஙகம் அதனை புரிந்து செய்ற்படவேண்டும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தரதெனியாய பகுதியில் தோட்ட மக்கள் சிறிய வாழைத் தோட்டங்களை செய்த போதும் போதும் அங்குள்ள புத்த பிக்கு மற்றும் சில குண்டர்கள் சேர்ந்து அதனை வெட்டி முழுவதுமாக அழித்துள்ளதாகவும் அப்பாவி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்ட பகுதி மக்கள் இந்த நாட்டின் பிரஜாவுரிமை என்றும் ஆனால் இன்றுவரை அவர்கள் பூரணமான பிரஜாவுரிமை பெற்றவர்களாக இல்லை என்றும் இன்று சபையில் தாம் அரசியல் கதைக்கவில்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

வாழைத் தோட்டத்தை அழித்த குண்டர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன. மனோ.samugammedia உணவு பற்றாக்குறையை தீர்ப்பதற்கு பல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் அது தற்போதுவரை தீர்க்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மனோ கணேசன் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.குறிப்பாக வீட்டுத்தோட்ட முறைமையின் கீழ் அருகில் உள்ள காணிகளை வழங்குவதாகவும் தோட்ட மக்கள் அதில் மரக்கறிகளை பயிரிடமுடியும் என  அமைச்சர் அறிவித்த போதும் இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தோட்டமக்கள் உணவின்றி அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தோட்ட மக்கள் தற்போது ஒரு நேரம் மட்டுமே உணவை உட்கொள்வதாகவும் எனவே அரசாஙகம் அதனை புரிந்து செய்ற்படவேண்டும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.மாத்தரதெனியாய பகுதியில் தோட்ட மக்கள் சிறிய வாழைத் தோட்டங்களை செய்த போதும் போதும் அங்குள்ள புத்த பிக்கு மற்றும் சில குண்டர்கள் சேர்ந்து அதனை வெட்டி முழுவதுமாக அழித்துள்ளதாகவும் அப்பாவி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.தோட்ட பகுதி மக்கள் இந்த நாட்டின் பிரஜாவுரிமை என்றும் ஆனால் இன்றுவரை அவர்கள் பூரணமான பிரஜாவுரிமை பெற்றவர்களாக இல்லை என்றும் இன்று சபையில் தாம் அரசியல் கதைக்கவில்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement