• May 05 2024

அஜித்திற்கு அந்த பழக்கம் இல்லை: த்ரிஷா ஓபன் டாக்!

Sharmi / Jan 7th 2023, 10:40 pm
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர்தான் நடிகர் அஜித் குமார்

இந்நிலையில் அஜித் தொடர்பில் நடிகை த்ரிஷா கூறும்போது, 



நடிகர் அஜித் குமாரிடம் மொபைல் போன் எல்லாம் கிடையாது என தெரிவித்தார். 

எல்லோருமே அவரவர்க்ளின் வசதிக்கேற்ப மொபைல் போன்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மொபைல் இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவிட்டது. அப்படிப்பட்ட இந்த காலகட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் குமாரிடம் மொபைல் இல்லை என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா?  இதனை நம்பித்தான் ஆகவேண்டும். நடிகை த்ரிஷாவே அதனை உறுதி செய்துள்ளார்.


நம்ம தல அஜித் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் மங்காத்தா, என்னை அறிந்தால், கிரீடம், ஜி, பூர்ணா மார்க்கெட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படங்களை அடுத்து அஜித் நடிக்கும் ஏகே62ஆவது படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது . இதற்கிடையில் கடந்த வாரம் த்ரிஷா நடிப்பில் உருவான ராங்கி படம் வெளியானது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்து கொண்டார்.


அப்போது, த்ரிஷாவிடம், அஜித் குமாரின் மொபைல் நம்பரை எண்ணவாக நீங்கள் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அந்த கேள்விக்கு த்ரிஷா, அஜித் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. அவருடன் இருக்கும் அவரது உதவியாளர் மூலமாக தான் அஜித்தை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

இது அனைவருக்கும் அதிர்ச்சியான விடயமாக  இருந்தாலும் இது தான் உண்மை என்பதை மறுக்க முடியாது.

 ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு தனது தொடர்பு எண்ணை மாற்றிக் கொண்டே இருப்பாராம். ஏனென்றால், வேறொரு படத்தில் பிஸியாக இருக்கும் போது முந்தைய படக்குழுவினர்கள் யாரும் தன்னை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் அஜித் கண்ணும் கருத்துமாக இருப்பாராம். அஜித் சமூக வலைதள பக்கத்தில் கூட இருப்பதில்லை. அஜித்திற்கு பிடித்த விஷயம் என்னவென்றால் பைக் ரேஸ் தானாம்.


அஜித்தின் மனைவி ஷாலினியிடம் மொபைல் போன் உள்ளது. அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்ததுடன் அதிக லைக்குகளையும் குவித்திருந்தது.

. அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் சமீபத்தில் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஜித்திற்கு அந்த பழக்கம் இல்லை: த்ரிஷா ஓபன் டாக் தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர்தான் நடிகர் அஜித் குமார்இந்நிலையில் அஜித் தொடர்பில் நடிகை த்ரிஷா கூறும்போது, நடிகர் அஜித் குமாரிடம் மொபைல் போன் எல்லாம் கிடையாது என தெரிவித்தார். எல்லோருமே அவரவர்க்ளின் வசதிக்கேற்ப மொபைல் போன்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மொபைல் இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவிட்டது. அப்படிப்பட்ட இந்த காலகட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் குமாரிடம் மொபைல் இல்லை என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா  இதனை நம்பித்தான் ஆகவேண்டும். நடிகை த்ரிஷாவே அதனை உறுதி செய்துள்ளார்.நம்ம தல அஜித் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் மங்காத்தா, என்னை அறிந்தால், கிரீடம், ஜி, பூர்ணா மார்க்கெட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்தப் படங்களை அடுத்து அஜித் நடிக்கும் ஏகே62ஆவது படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது . இதற்கிடையில் கடந்த வாரம் த்ரிஷா நடிப்பில் உருவான ராங்கி படம் வெளியானது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்து கொண்டார். அப்போது, த்ரிஷாவிடம், அஜித் குமாரின் மொபைல் நம்பரை எண்ணவாக நீங்கள் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.அந்த கேள்விக்கு த்ரிஷா, அஜித் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. அவருடன் இருக்கும் அவரது உதவியாளர் மூலமாக தான் அஜித்தை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சியான விடயமாக  இருந்தாலும் இது தான் உண்மை என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு தனது தொடர்பு எண்ணை மாற்றிக் கொண்டே இருப்பாராம். ஏனென்றால், வேறொரு படத்தில் பிஸியாக இருக்கும் போது முந்தைய படக்குழுவினர்கள் யாரும் தன்னை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் அஜித் கண்ணும் கருத்துமாக இருப்பாராம். அஜித் சமூக வலைதள பக்கத்தில் கூட இருப்பதில்லை. அஜித்திற்கு பிடித்த விஷயம் என்னவென்றால் பைக் ரேஸ் தானாம்.அஜித்தின் மனைவி ஷாலினியிடம் மொபைல் போன் உள்ளது. அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்ததுடன் அதிக லைக்குகளையும் குவித்திருந்தது. அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் சமீபத்தில் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement