• May 05 2024

யாழில் இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் அசைவ உணவங்களை திறக்க தடை.!

Sharmi / Feb 3rd 2023, 5:14 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் 10 மீற்றர் இடைவெளிக்குள் அசைவ உணவங்களை அமைக்க முடியாதென நல்லூர் பிரதேசசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய கம்பனி ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த அசைவ உணவகத்திற்கு சமய அமைப்புக்கள் சில எதிர்ப்பு காட்டியிருந்த நிலையில்இ கட்டிட அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதிப் பத்திரம் ஆகியன பெற்றுக் கொள்ளப்படாமையினால், நல்லூர் பிரதேச சபையின் கடந்த 17ஆம் திகதி அமர்வில் அது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

அத்துடன், சட்ட ஆலோசனை பெறுவதெனவும் அதுவரையில் குறித்த உணவகத்திற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி நல்லூர் பிரதேசசபை தவிசாளரின் கடந்த 20 திகதியிட்ட கடிதத்தின் படி உணவகத்தை தற்காலிகமாக மூடும் உத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் நல்லூர் பிரதேசசபையில் தவிசாளர் ப.மயூரன் தலைமையில் உணவகத்திற்கான அனுமதி குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது உணவகத்திற்கு எதிரே 10 மீற்றர் இடைவெளியில் சைவ ஆலயம் அமைந்திருக்கும் நிலையில் உணவகதற்கு அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழில் இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் அசைவ உணவங்களை திறக்க தடை. யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் 10 மீற்றர் இடைவெளிக்குள் அசைவ உணவங்களை அமைக்க முடியாதென நல்லூர் பிரதேசசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய கம்பனி ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.குறித்த அசைவ உணவகத்திற்கு சமய அமைப்புக்கள் சில எதிர்ப்பு காட்டியிருந்த நிலையில்இ கட்டிட அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதிப் பத்திரம் ஆகியன பெற்றுக் கொள்ளப்படாமையினால், நல்லூர் பிரதேச சபையின் கடந்த 17ஆம் திகதி அமர்வில் அது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.அத்துடன், சட்ட ஆலோசனை பெறுவதெனவும் அதுவரையில் குறித்த உணவகத்திற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.அதன்படி நல்லூர் பிரதேசசபை தவிசாளரின் கடந்த 20 திகதியிட்ட கடிதத்தின் படி உணவகத்தை தற்காலிகமாக மூடும் உத்தரவு வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்றைய தினம் நல்லூர் பிரதேசசபையில் தவிசாளர் ப.மயூரன் தலைமையில் உணவகத்திற்கான அனுமதி குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது.இதன்போது உணவகத்திற்கு எதிரே 10 மீற்றர் இடைவெளியில் சைவ ஆலயம் அமைந்திருக்கும் நிலையில் உணவகதற்கு அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement