• Jul 01 2024

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி அறிக்கை! samugammedia

Tamil nila / Aug 2nd 2023, 4:14 pm
image

Advertisement

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பான விசேட அறிவிக்கையொன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் செட்டில்மென்ட்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே பயன்படுத்தப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுப்பனவுகள் செட்டில்மென்ட்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி வலியுறுத்துகிறது.

மேலும் இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி அறிக்கை samugammedia இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.இது தொடர்பான விசேட அறிவிக்கையொன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் செட்டில்மென்ட்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே பயன்படுத்தப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுப்பனவுகள் செட்டில்மென்ட்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி வலியுறுத்துகிறது.மேலும் இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement