• May 06 2024

ஜனவரி மாத பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்..! SamugamMedia

Chithra / Feb 21st 2023, 5:27 pm
image

Advertisement

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த வருடம் டிசம்பரில் 59.2 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஜனவரியில் 53.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேநேரம், உணவு பணவீக்கமானது கடந்த டிசம்பர் மாதத்தில் 59.3 சதவீமாக காணப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 53.6 சதவீமாக குறைவடைந்துள்ளது.

உணவல்லாப் பணவீக்கம் 2022 டிசம்பரில் 59 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 52.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.

ஜனவரி மாத பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம். SamugamMedia தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, கடந்த வருடம் டிசம்பரில் 59.2 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஜனவரியில் 53.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.அதேநேரம், உணவு பணவீக்கமானது கடந்த டிசம்பர் மாதத்தில் 59.3 சதவீமாக காணப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 53.6 சதவீமாக குறைவடைந்துள்ளது.உணவல்லாப் பணவீக்கம் 2022 டிசம்பரில் 59 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 52.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement