• May 05 2024

கொரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழியும் சீன மருத்துவமனைகள்: கலக்கத்தில் உலக நாடுகள்!

Sharmi / Dec 16th 2022, 11:18 am
image

Advertisement

சீனாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கு 15 நாட்களாக கொரோனா (ஒமைக்ரான்) அலை தாண்டவமாட தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


கொரோனா தொற்றால் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள், பீஜிங் தூதரக பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களிலும் கிளினிக்குகளிலும், மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதேவேளை வாட்டியெடுக்கும் குளிருக்கு மத்தியிலும் நடைபாதை வரை நோயாளிகள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

பலர் கார்களுக்குள் படுத்துக்கொண்டே அவர்களுக்கு 'டிரிப்ஸ்' (குழாய்வழி திரவங்கள்) செலுத்தப்படுகிறது.

இன்னும் பலர் கடுமையான காய்ச்சலுடன் கிளினிக்குகளின் வெளியே காத்திருக்கின்றனர்.



இது தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.


கொரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழியும் சீன மருத்துவமனைகள்: கலக்கத்தில் உலக நாடுகள் சீனாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கு 15 நாட்களாக கொரோனா (ஒமைக்ரான்) அலை தாண்டவமாட தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றால் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள், பீஜிங் தூதரக பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களிலும் கிளினிக்குகளிலும், மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.இதேவேளை வாட்டியெடுக்கும் குளிருக்கு மத்தியிலும் நடைபாதை வரை நோயாளிகள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.பலர் கார்களுக்குள் படுத்துக்கொண்டே அவர்களுக்கு 'டிரிப்ஸ்' (குழாய்வழி திரவங்கள்) செலுத்தப்படுகிறது.இன்னும் பலர் கடுமையான காய்ச்சலுடன் கிளினிக்குகளின் வெளியே காத்திருக்கின்றனர்.இது தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement