• Jun 28 2024

பல்கலைக்கழகங்களாக மாறும் கல்வியியற் கல்லூரிகள்...!அமைச்சரவையில் அங்கீகாரம்...! samugammedia

Sharmi / Oct 3rd 2023, 4:34 pm
image

Advertisement

நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த  அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2019.12.04 திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகள் தற்போதுள்ள 20 கல்வியல் கல்லூரிகளில் 19 கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகமாக உயர்த்துவதற்கும், அத்துடன் இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கும் ஏதுவான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களாக மாறும் கல்வியியற் கல்லூரிகள்.அமைச்சரவையில் அங்கீகாரம். samugammedia நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த  அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2019.12.04 திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த குழுவின் பரிந்துரைகள் தற்போதுள்ள 20 கல்வியல் கல்லூரிகளில் 19 கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகமாக உயர்த்துவதற்கும், அத்துடன் இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கும் ஏதுவான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement