• May 07 2024

நாலவர் கலாசார மண்டபம் தொடர்பில் வடக்கு ஆளுநரின் தீர்மானம்; நீதிமன்றத்தை நாடவுள்ள மணிவண்ணன்! samugammedia

Chithra / Mar 28th 2023, 1:03 pm
image

Advertisement

வடக்கு ஆளுநரின் தீர்மானத்தை நிறுத்துமாறு 28 மாநகர சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனுவொன்றை ஒப்படைத்துள்ளோம். இதேவேளை யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் மணிவண்ணன் ஆளுநரின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடவுள்ளார் என யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாலவர் கலாசார மண்டபமானது கடந்த 40 ஆண்டுகளாக யாழ் மாநகர சபையின் 

பராமரிப்பிலிருந்து வருகின்றது. இம் மண்டபத்தைக் கையகப்படுத்த வேண்டுமென்ற மத்திய அரசின் பல முயற்சிகள் மாநகர சபையின் 45 உறுப்பினரின் ஏகோபித்த ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.

காலப்போக்கில் இம் மண்டபத்தை இரூ தரப்புக்களும் இணைந்து நிர்வகிக்க வேண்டுமென சமயத் தலைவர்களின் கோரிக்கைக்கமைய இந்து கலாச்சார அமைச்சும் இந்து கலாச்சாரத் திணைக்களமும் யாழ் மாநகர சபையும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக மண்டபத்தை  பராமரிப்பதற்கு தீர்மானித்திருந்தனர்.

இவ் விடயம் தொடர்பில் கடந்த வருடம் அன்றைய இந்து கலாசாரத் திணைக்களத்தினுடைய பணிப்பாளராகவிருந்த  உமா . மகேஸ்வரன் அவர்கள் இரு தரப்பும் ஒன்றாக இணைந்து மண்டபத்தை பராமரிப்போம் என கடிதம் மூலம் யாழ் மாநகர சபைக்கு அறிவித்திருந்தார்.

கடந்த 19 ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்த நிலையிலே  23 ம் திகதி யாழ் மாநகர சபையை  நாவலர் மண்டபத்திலிரு்ந்து வெளியேறுமாறு ஆளுநரிடமிருந்து கடிதம் வந்ததாக அறிய முடிகின்றது. 

இவ்வளவு காலமும் மண்டபத்தை பராமரித்து வந்த மாநகர சபையை பதவிக்காலம் நிறைவுற்றவுடன் வெளியேற்றி மண்டபத்தை கைப்பற்ற முயற்சிப்பதற்கான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாகும்.

இதற்கு நாவலர் மண்டபத்திலிருந்த நாவலர் படத்துக்கு பதிலாக பதாகையை காட்சிப்படுத்தியமையாலேயே மாநகர சபையை வெளியேற்றியதாக காரணங்களைக் கூறி வருகின்றனர்.

குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக ஆளுநர் எவ்விதமான நடவடிக்கைகளையோ கண்டனத்தையோ வெளியிடவில்லை. ஆனால் பௌத்தத்திற்கும் இந்து கலாசாரத்திற்கும் பங்கம் விளைவிக்கும் விதத்திலே இவரது செயற்பாடுகள் காணப்படுகின்றது.

இதேவேளை ஆளுநரின்  தீர்மானத்தை நிறுத்துமாறு 28 மாநகர சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனுவொன்றை ஒப்படைத்துள்ளோம். இதேவேளை யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் மணிவண்ணன் ஆளுநரின் தீர்மானம்  தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

எனவே இத் தீர்மானத்தை நிறுத்துவதற்கு சட்ட ஏற்பாடு மற்றும் பல்வேறு வழிகளிலும் நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம். - என்றார்

நாலவர் கலாசார மண்டபம் தொடர்பில் வடக்கு ஆளுநரின் தீர்மானம்; நீதிமன்றத்தை நாடவுள்ள மணிவண்ணன் samugammedia வடக்கு ஆளுநரின் தீர்மானத்தை நிறுத்துமாறு 28 மாநகர சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனுவொன்றை ஒப்படைத்துள்ளோம். இதேவேளை யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் மணிவண்ணன் ஆளுநரின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடவுள்ளார் என யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாலவர் கலாசார மண்டபமானது கடந்த 40 ஆண்டுகளாக யாழ் மாநகர சபையின் பராமரிப்பிலிருந்து வருகின்றது. இம் மண்டபத்தைக் கையகப்படுத்த வேண்டுமென்ற மத்திய அரசின் பல முயற்சிகள் மாநகர சபையின் 45 உறுப்பினரின் ஏகோபித்த ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.காலப்போக்கில் இம் மண்டபத்தை இரூ தரப்புக்களும் இணைந்து நிர்வகிக்க வேண்டுமென சமயத் தலைவர்களின் கோரிக்கைக்கமைய இந்து கலாச்சார அமைச்சும் இந்து கலாச்சாரத் திணைக்களமும் யாழ் மாநகர சபையும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக மண்டபத்தை  பராமரிப்பதற்கு தீர்மானித்திருந்தனர்.இவ் விடயம் தொடர்பில் கடந்த வருடம் அன்றைய இந்து கலாசாரத் திணைக்களத்தினுடைய பணிப்பாளராகவிருந்த  உமா . மகேஸ்வரன் அவர்கள் இரு தரப்பும் ஒன்றாக இணைந்து மண்டபத்தை பராமரிப்போம் என கடிதம் மூலம் யாழ் மாநகர சபைக்கு அறிவித்திருந்தார்.கடந்த 19 ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்த நிலையிலே  23 ம் திகதி யாழ் மாநகர சபையை  நாவலர் மண்டபத்திலிரு்ந்து வெளியேறுமாறு ஆளுநரிடமிருந்து கடிதம் வந்ததாக அறிய முடிகின்றது. இவ்வளவு காலமும் மண்டபத்தை பராமரித்து வந்த மாநகர சபையை பதவிக்காலம் நிறைவுற்றவுடன் வெளியேற்றி மண்டபத்தை கைப்பற்ற முயற்சிப்பதற்கான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாகும்.இதற்கு நாவலர் மண்டபத்திலிருந்த நாவலர் படத்துக்கு பதிலாக பதாகையை காட்சிப்படுத்தியமையாலேயே மாநகர சபையை வெளியேற்றியதாக காரணங்களைக் கூறி வருகின்றனர்.குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக ஆளுநர் எவ்விதமான நடவடிக்கைகளையோ கண்டனத்தையோ வெளியிடவில்லை. ஆனால் பௌத்தத்திற்கும் இந்து கலாசாரத்திற்கும் பங்கம் விளைவிக்கும் விதத்திலே இவரது செயற்பாடுகள் காணப்படுகின்றது.இதேவேளை ஆளுநரின்  தீர்மானத்தை நிறுத்துமாறு 28 மாநகர சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனுவொன்றை ஒப்படைத்துள்ளோம். இதேவேளை யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் மணிவண்ணன் ஆளுநரின் தீர்மானம்  தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடவுள்ளார்.எனவே இத் தீர்மானத்தை நிறுத்துவதற்கு சட்ட ஏற்பாடு மற்றும் பல்வேறு வழிகளிலும் நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம். - என்றார்

Advertisement

Advertisement

Advertisement