• May 07 2024

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து தனுஷ்க குணதிலக்க விடுதலை...!உண்மை வெல்லும்...! அமைச்சர் ஹரின் டுவிட்...!samugammedia

Sharmi / Sep 28th 2023, 2:55 pm
image

Advertisement

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ "உண்மை வெல்லும்" என தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா – சிட்னி நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு இன்று  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ்க குணதிலக்க உடலுறவின் போது ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் உண்மையாக இருந்தார் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ருவிட்டர் பக்கத்தில்,

"உண்மை வெல்லும்! தனுஷ்க குணதிலகா முக்கிய தீர்ப்புடன் விடுதலை" என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பாலியல் குற்றச்சாட்டிலிருந்து தனுஷ்க குணதிலக்க விடுதலை.உண்மை வெல்லும். அமைச்சர் ஹரின் டுவிட்.samugammedia பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ "உண்மை வெல்லும்" என தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவு செய்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலியா – சிட்னி நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு இன்று  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.தனுஷ்க குணதிலக்க உடலுறவின் போது ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் உண்மையாக இருந்தார் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ருவிட்டர் பக்கத்தில்,"உண்மை வெல்லும் தனுஷ்க குணதிலகா முக்கிய தீர்ப்புடன் விடுதலை" என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement