• May 06 2024

லவ்வர்ஸ் டேயில் காதலர்கள் மறந்தும்கூட இதை செய்யாதீர்கள்!SamugamMedia

Sharmi / Feb 14th 2023, 11:08 am
image

Advertisement

வருடாவருடம் உலகெங்கிலும் பிப்ரவரி-7ம் தேதி முதல் காதலர் தின வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பிப்ரவரி-14ம் தேதியான இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் பலரும் தங்கள் காதல் துணையுடன் நேரத்தை செலவிட்டோ அல்லது தங்களுக்கு பிடித்தமானவரிடம் காதலை வெளிப்படுத்திக்கொண்டோ இருப்பார்கள். 

காதலர் தினத்தை புதிதாக கொண்டாடுபவர்கள் என்றால் பிரச்சனை; இதுவே இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் காதல் செய்பவர்களாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் இந்த காதலர் தினத்தில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் யாரையாவது காதலித்தீர்கள் என்றால் காதல் கடிதம் அல்லது மலர் கொத்துகள் அல்லது பரிசுகளின் முடிவில் உங்கள் பெயரை தைரியமாக எழுதுங்கள்.  நீங்கள் யாரென்று குறிப்பிடாமல் பரிசை உங்கள் காதல் துணைக்கு அனுப்பினால் கட்டாயம் அவர்களுக்கு உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படாது. 


பிப்ரவரி 14-ஐ கொண்டாடுவதன் முழு நோக்கம் உங்கள் வாழ்க்கையில் அன்பையும் காதலையும் மேம்படுத்துவதாகும். கிஃப்ட் வவுச்சர் அல்லது கிஃப்ட் கார்டை வாங்கினால், அதில் உன் விருப்பங்களை நிறைவேற்ற விரும்புகிறேன் ஆனால் உனக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியாது என்பது போன்ற வசனங்களை எழுதாதீர்கள்.  ஏனெனில் இது உங்கள் உறவில் உங்கள் அக்கறை மற்றும் இரக்கமின்மையைக் காட்டும்.

இன்றைய தினத்தில் கையில் மோதிரத்துடன் மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்ய முயற்சிக்காதீர்கள், இந்த நாளில் மகிழ்ச்கியாக உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து காதல் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள்.  குறிப்பாக மக்கள் இந்த நாளில் ஆடம்பரமான உணவகங்களுக்குச் செல்கிறார்கள், நீங்களும் இதுபோன்ற இடங்களுக்கு உங்கள் காதல் துணையை அழைத்து செல்லலாம். 

உங்கள் வாழ்க்கையில் பல காதல் உறவுகள் இருந்திருக்கலாம் அதற்காக இந்த நாளில் அதையெல்லாம் நீங்கள் நினைவுகூறாதீர்கள். தற்போது இருக்கும் உறவில் பழைய உறவின் நியாபகங்களை கொண்டுவர முயற்சி செய்யாதீர்கள், தற்போதுள்ள துணையுடன் காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.  முதன்முறையாக இந்த நாளில் உங்கள் துணையுடன் நீங்கள் வெளியில் செல்கிறீர்கள் என்றால் இன்றைய தினம் எந்தவொரு வாக்குறுதிகளையும் அளிக்காதீர்கள்.

இந்த காதலர் தினத்தில் நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை மனதைக் கவரும் பரிசின் மூலம் ஆச்சரியப்படுத்தினால், உங்களை கட்டிப்பிடித்தால் அல்லது முத்தமிட்டால் தயவு செய்து அழாதீர்கள்.  நீங்கள் ஆனந்த கண்ணீர் விடலாம்; ஆனால் பொதுவெளியில் இதுபோன்று அழுவது மற்றவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.  இந்த நாளில் நீங்கள் பதட்டமாக இருந்தால், சிறிது ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்கலாம் ஆனால் மது அருந்த வேண்டாம்.  அது உங்கள் மீது மற்றவருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாமல் போய்விடக்கூடும். 


உங்களுக்கு ஏதேனும் ஒரு நண்பர் இருந்தால் உங்கள் காதல் துணையை சந்திக்க செல்லும்போது அவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம்.  இந்த நாள் உங்களுக்கும் உங்கள் துணைக்குமானது, நீங்கள் இருவர் மட்டுமே இந்த தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.  காதலர் தினம் தேவையில்லாத ஒன்று என்பது போன்ற கருத்துக்களை இந்த நாளில் நீங்கள் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. 

காதலர் தினத்தன்று ஒருபோதும் உங்கள் காதல் துணையை விட்டு பிரிந்து செல்லும் முடிவை எடுக்காதீர்கள் இது அவர்களுக்கு ஆறாத வடுவாக மாறி வலியை ஏற்படுத்தும்.  பிரேக்-அப் செய்வது என்று முடிவெடுத்தால் காதலர் தினத்துக்கு சில நாட்கள் முன்னரோ அல்லது சில நாட்கள் பின்னரோ பிரிந்து செல்லுங்கள்.


லவ்வர்ஸ் டேயில் காதலர்கள் மறந்தும்கூட இதை செய்யாதீர்கள்SamugamMedia வருடாவருடம் உலகெங்கிலும் பிப்ரவரி-7ம் தேதி முதல் காதலர் தின வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி-14ம் தேதியான இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் பலரும் தங்கள் காதல் துணையுடன் நேரத்தை செலவிட்டோ அல்லது தங்களுக்கு பிடித்தமானவரிடம் காதலை வெளிப்படுத்திக்கொண்டோ இருப்பார்கள்.  காதலர் தினத்தை புதிதாக கொண்டாடுபவர்கள் என்றால் பிரச்சனை; இதுவே இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் காதல் செய்பவர்களாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் இந்த காதலர் தினத்தில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.நீங்கள் யாரையாவது காதலித்தீர்கள் என்றால் காதல் கடிதம் அல்லது மலர் கொத்துகள் அல்லது பரிசுகளின் முடிவில் உங்கள் பெயரை தைரியமாக எழுதுங்கள்.  நீங்கள் யாரென்று குறிப்பிடாமல் பரிசை உங்கள் காதல் துணைக்கு அனுப்பினால் கட்டாயம் அவர்களுக்கு உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படாது.  பிப்ரவரி 14-ஐ கொண்டாடுவதன் முழு நோக்கம் உங்கள் வாழ்க்கையில் அன்பையும் காதலையும் மேம்படுத்துவதாகும். கிஃப்ட் வவுச்சர் அல்லது கிஃப்ட் கார்டை வாங்கினால், அதில் உன் விருப்பங்களை நிறைவேற்ற விரும்புகிறேன் ஆனால் உனக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியாது என்பது போன்ற வசனங்களை எழுதாதீர்கள்.  ஏனெனில் இது உங்கள் உறவில் உங்கள் அக்கறை மற்றும் இரக்கமின்மையைக் காட்டும்.இன்றைய தினத்தில் கையில் மோதிரத்துடன் மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்ய முயற்சிக்காதீர்கள், இந்த நாளில் மகிழ்ச்கியாக உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து காதல் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள்.  குறிப்பாக மக்கள் இந்த நாளில் ஆடம்பரமான உணவகங்களுக்குச் செல்கிறார்கள், நீங்களும் இதுபோன்ற இடங்களுக்கு உங்கள் காதல் துணையை அழைத்து செல்லலாம்.  உங்கள் வாழ்க்கையில் பல காதல் உறவுகள் இருந்திருக்கலாம் அதற்காக இந்த நாளில் அதையெல்லாம் நீங்கள் நினைவுகூறாதீர்கள். தற்போது இருக்கும் உறவில் பழைய உறவின் நியாபகங்களை கொண்டுவர முயற்சி செய்யாதீர்கள், தற்போதுள்ள துணையுடன் காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.  முதன்முறையாக இந்த நாளில் உங்கள் துணையுடன் நீங்கள் வெளியில் செல்கிறீர்கள் என்றால் இன்றைய தினம் எந்தவொரு வாக்குறுதிகளையும் அளிக்காதீர்கள்.இந்த காதலர் தினத்தில் நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை மனதைக் கவரும் பரிசின் மூலம் ஆச்சரியப்படுத்தினால், உங்களை கட்டிப்பிடித்தால் அல்லது முத்தமிட்டால் தயவு செய்து அழாதீர்கள்.  நீங்கள் ஆனந்த கண்ணீர் விடலாம்; ஆனால் பொதுவெளியில் இதுபோன்று அழுவது மற்றவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.  இந்த நாளில் நீங்கள் பதட்டமாக இருந்தால், சிறிது ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்கலாம் ஆனால் மது அருந்த வேண்டாம்.  அது உங்கள் மீது மற்றவருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாமல் போய்விடக்கூடும்.  உங்களுக்கு ஏதேனும் ஒரு நண்பர் இருந்தால் உங்கள் காதல் துணையை சந்திக்க செல்லும்போது அவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம்.  இந்த நாள் உங்களுக்கும் உங்கள் துணைக்குமானது, நீங்கள் இருவர் மட்டுமே இந்த தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.  காதலர் தினம் தேவையில்லாத ஒன்று என்பது போன்ற கருத்துக்களை இந்த நாளில் நீங்கள் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.  காதலர் தினத்தன்று ஒருபோதும் உங்கள் காதல் துணையை விட்டு பிரிந்து செல்லும் முடிவை எடுக்காதீர்கள் இது அவர்களுக்கு ஆறாத வடுவாக மாறி வலியை ஏற்படுத்தும்.  பிரேக்-அப் செய்வது என்று முடிவெடுத்தால் காதலர் தினத்துக்கு சில நாட்கள் முன்னரோ அல்லது சில நாட்கள் பின்னரோ பிரிந்து செல்லுங்கள்.

Advertisement

Advertisement

Advertisement