• Nov 25 2024

ஜனாதிபதியின் நற்சான்று பட்டியலில் முதன்மை இடத்திலுள்ள டக்ளஸின் பெயர் - ஸ்டாலின்

Tharmini / Oct 22nd 2024, 1:07 pm
image

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும், நசார்தீன் முகம்மது ஸஹீதை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (21) கிண்ணியாவில் நடைபெற்றது. இதன்போது, ஊடகங்களுக்கு  அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் அரசியல் கொள்கைக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் கொள்கைக்கும் இடையில் ஒற்றுமையும் பரஸ்பரமும் காணப்படுகின்றது. அவர்களும் இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் நாங்களும் இடதுசாரிக் கொள்கையை உடையவர்கள். அதேபோன்று ஒரு ஆயுதப் போராட்டத்தின் பின்னணியில் இருந்து ஜனநாயகத்துக்கு அவர்களைப் போன்று நாங்களும் அவ்வாறே வந்தவர்கள். 

மேலும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிபன் மோசடி மற்றும் ஊழல் அற்ற  நற்சான்று பட்டியலில், எங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரும் முதன்மையான இடத்தில் உள்ளது. எனவே, எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கின்ற அரசியல் ரீதியான ஜனநாயகப் பண்புகளும் கொள்கைகளும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு தொடர்பும் காணப்படுகின்றது, இதன் காரணமாக, பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், அவர்களோடு சேர்ந்து, அந்த ஆட்சிக்கு, ஒத்துழைப்பு வழங்கி செல்வதில் எந்தவித தவறும் இல்லை.

தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் தந்துரூபாயங்களை வகுத்து, செயற்படுவது எமது கட்சியின் வளமையான செயற்பாடு அல்ல. அதேபோன்று கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து வாக்குகளை அபகரிப்பதற்காக திட்டங்களை வகுப்பதும் எங்களுடைய கட்சியின் நடைமுறை அல்ல. ஈபிடிபி ஐ பொறுத்தவரை, கிடைக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு, பல்வேறு முயற்சிகளை செய்து பல சாதகமான காரியங்களை, வெற்றிகரமானதாக நிறைவேற்றுவதே இலக்காகும்.

எடுத்துக்காட்டாக திருகோணமலை மாவட்டத்தில் 11 மேல் குடியேற்றங்களை செய்து இருக்கிறோம். அதில் 16 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்றும் நினைக்கிறோம். அதேபோன்று சமுர்த்தி, தொண்டாராசிரியர் நியமனம் என பல அரசதுறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம். 1994 ஆம் ஆண்டில் வடக்கில் கிடைத்த ஒரு அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சேவைகளை செய்திருக்கிறோம். எனவே, இந்த பாராளுமன்ற தேர்தலில் இங்கிருந்து ஒரு அரசியல் அதிகாரத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

ஜனாதிபதியின் நற்சான்று பட்டியலில் முதன்மை இடத்திலுள்ள டக்ளஸின் பெயர் - ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும், நசார்தீன் முகம்மது ஸஹீதை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (21) கிண்ணியாவில் நடைபெற்றது. இதன்போது, ஊடகங்களுக்கு  அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் அரசியல் கொள்கைக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் கொள்கைக்கும் இடையில் ஒற்றுமையும் பரஸ்பரமும் காணப்படுகின்றது. அவர்களும் இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் நாங்களும் இடதுசாரிக் கொள்கையை உடையவர்கள். அதேபோன்று ஒரு ஆயுதப் போராட்டத்தின் பின்னணியில் இருந்து ஜனநாயகத்துக்கு அவர்களைப் போன்று நாங்களும் அவ்வாறே வந்தவர்கள். மேலும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிபன் மோசடி மற்றும் ஊழல் அற்ற  நற்சான்று பட்டியலில், எங்களுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரும் முதன்மையான இடத்தில் உள்ளது. எனவே, எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கின்ற அரசியல் ரீதியான ஜனநாயகப் பண்புகளும் கொள்கைகளும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு தொடர்பும் காணப்படுகின்றது, இதன் காரணமாக, பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், அவர்களோடு சேர்ந்து, அந்த ஆட்சிக்கு, ஒத்துழைப்பு வழங்கி செல்வதில் எந்தவித தவறும் இல்லை.தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் தந்துரூபாயங்களை வகுத்து, செயற்படுவது எமது கட்சியின் வளமையான செயற்பாடு அல்ல. அதேபோன்று கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து வாக்குகளை அபகரிப்பதற்காக திட்டங்களை வகுப்பதும் எங்களுடைய கட்சியின் நடைமுறை அல்ல. ஈபிடிபி ஐ பொறுத்தவரை, கிடைக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு, பல்வேறு முயற்சிகளை செய்து பல சாதகமான காரியங்களை, வெற்றிகரமானதாக நிறைவேற்றுவதே இலக்காகும்.எடுத்துக்காட்டாக திருகோணமலை மாவட்டத்தில் 11 மேல் குடியேற்றங்களை செய்து இருக்கிறோம். அதில் 16 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்றும் நினைக்கிறோம். அதேபோன்று சமுர்த்தி, தொண்டாராசிரியர் நியமனம் என பல அரசதுறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம். 1994 ஆம் ஆண்டில் வடக்கில் கிடைத்த ஒரு அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சேவைகளை செய்திருக்கிறோம். எனவே, இந்த பாராளுமன்ற தேர்தலில் இங்கிருந்து ஒரு அரசியல் அதிகாரத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

Advertisement

Advertisement

Advertisement