ஈக்வடோர் நாட்டின் தெற்கில் ஒரு குற்றக் கும்பலிடம் இருந்து கடத்தப்பட்ட 49 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அசுவே மாகாணத்தில் உள்ள சுரங்கப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல்களுக்குப் பின்னால் லாஸ் லோபோஸ் (தி வுல்வ்ஸ்) குற்றக் கும்பல் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுதப்படைகளின் முந்தைய அறிக்கை 46 பேர் மீட்கப்பட்டதாகவும், ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் - அவர்களில் நான்கு பேர் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சோதனையின் போது டைனமைட், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
மீட்பு நடவடிக்கையின் போது 20க்கும் மேற்பட்டோர் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் யரும் காயமடையவில்லை எனவும் ஈக்வடோர் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடத்தல் கும்பலிடம் இருந்து 49 பேரை ஈக்வடோர் பொலிஸார் மீட்டனர் ஈக்வடோர் நாட்டின் தெற்கில் ஒரு குற்றக் கும்பலிடம் இருந்து கடத்தப்பட்ட 49 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அசுவே மாகாணத்தில் உள்ள சுரங்கப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.கடத்தல்களுக்குப் பின்னால் லாஸ் லோபோஸ் (தி வுல்வ்ஸ்) குற்றக் கும்பல் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆயுதப்படைகளின் முந்தைய அறிக்கை 46 பேர் மீட்கப்பட்டதாகவும், ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் - அவர்களில் நான்கு பேர் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.சோதனையின் போது டைனமைட், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.மீட்பு நடவடிக்கையின் போது 20க்கும் மேற்பட்டோர் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் யரும் காயமடையவில்லை எனவும் ஈக்வடோர் ராணுவம் தெரிவித்துள்ளது.