• May 07 2024

எலான் மஸ்க் உயிருக்கு ஆபத்து- தந்தை அச்சம் ! samugammedia

Tamil nila / Sep 5th 2023, 8:37 pm
image

Advertisement

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலகின் நம்பர் 1 பில்லியனருமான எலோன் மஸ்க் தனது பிரமாண்டமான திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்.

மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் தனியார் ஸ்பேஸ் ஷட்டில் ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல முக்கிய நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் மஸ்க், கடந்த ஆண்டு உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரையும் சுமார் ரூ.37,000 கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார்.

“எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையில், “அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. 

மஸ்க், டுவிட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனே அறிவித்தார்” என கூறப்பட்டிருந்தது. அதை “எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என்று வர்ணித்ததாக பிரபல அமெரிக்க பத்திரிகையான “தி நியூ யார்க்கர்” தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தக் கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் (77), “எனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நான் அஞ்சுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு எலோன் மஸ்க்கின் அலுவலகத்தில் பாதுகாப்புப் படையினர் வலம் வருவதாக சில எக்ஸ் ஊழியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் உயிருக்கு ஆபத்து- தந்தை அச்சம் samugammedia அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலகின் நம்பர் 1 பில்லியனருமான எலோன் மஸ்க் தனது பிரமாண்டமான திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்.மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் தனியார் ஸ்பேஸ் ஷட்டில் ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல முக்கிய நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் மஸ்க், கடந்த ஆண்டு உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரையும் சுமார் ரூ.37,000 கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார்.“எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையில், “அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. மஸ்க், டுவிட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனே அறிவித்தார்” என கூறப்பட்டிருந்தது. அதை “எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என்று வர்ணித்ததாக பிரபல அமெரிக்க பத்திரிகையான “தி நியூ யார்க்கர்” தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்தக் கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் (77), “எனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நான் அஞ்சுகிறேன்.சில மாதங்களுக்கு முன்பு எலோன் மஸ்க்கின் அலுவலகத்தில் பாதுகாப்புப் படையினர் வலம் வருவதாக சில எக்ஸ் ஊழியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement