• May 06 2024

ராஜபக்சாக்களுக்கு குட்பாய்...! நாங்கள் தனிவழி...! கம்பன்பில திட்டவட்டம்...!samugammedia

Sharmi / Nov 3rd 2023, 11:24 am
image

Advertisement

ராஜபக்சக்களின் முறையற்ற செயற்பாடுகளினால்தான் நாடு வங்குரோத்து நிலையடைந்ததுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளதுடன் மீண்டும் ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த உதய கம்மன்பில,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைகள் கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டதால் பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி பங்காளி அரசியல் தரப்பினரை ஒன்றிணைத்து கூட்டணியாக செயற்படுகிறோம்.      

இந்நிலையில்,  எதிர்வரும் தேர்தல்களில் எமது கூட்டணியை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவோம்.  அதேவேளை பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் இணையும் நோக்கம் எமக்கில்லை. ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணையப்போவதில்லை. 

எனவே எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் எமது கூட்டணியை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

மறுபுறம் பொதுஜன பெரமுனவின் அரசியல் நிலைப்பாடு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

ஆகவே அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிடலாம் எனவும் தெரிவித்தார்.





  


ராஜபக்சாக்களுக்கு குட்பாய். நாங்கள் தனிவழி. கம்பன்பில திட்டவட்டம்.samugammedia ராஜபக்சக்களின் முறையற்ற செயற்பாடுகளினால்தான் நாடு வங்குரோத்து நிலையடைந்ததுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளதுடன் மீண்டும் ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த உதய கம்மன்பில,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைகள் கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டதால் பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி பங்காளி அரசியல் தரப்பினரை ஒன்றிணைத்து கூட்டணியாக செயற்படுகிறோம்.      இந்நிலையில்,  எதிர்வரும் தேர்தல்களில் எமது கூட்டணியை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவோம்.  அதேவேளை பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் இணையும் நோக்கம் எமக்கில்லை. ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணையப்போவதில்லை. எனவே எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் எமது கூட்டணியை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.மறுபுறம் பொதுஜன பெரமுனவின் அரசியல் நிலைப்பாடு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிடலாம் எனவும் தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement