• May 18 2024

கைது செய்வோம்..! - யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மிரட்டிய அதிகாரி

Chithra / Dec 21st 2022, 11:14 am
image

Advertisement

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்றையதினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

காணாமல் போன ஆட்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனொரு கட்டமாக யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதோடு ஒரு சிலர் அதிகாரிகளிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின் போது அதிகாரியொருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில்,

சேவை செய்கின்ற இடத்தில் ஆட்களை வர சொல்லியுள்ளோம். உங்களுக்கு சேவை விருப்பம் எனின் சத்தம் போடாமல் இந்த சேவையினை முடித்து விட்டு போகலாம். இல்லையேல் இந்த போராட்டத்தை வெளியில் சென்று செய்துகொள்ளலாம்.

இதற்குள் வந்து எந்த சத்தமும், சேட்டையும் செய்யக் கூடாது. ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக இருந்தால் வெளியில் சென்று செய்துகொள்ளுங்கள்.

இங்கே இடம்பெறுகின்ற வேலையினை நிறுத்துவதாக கூறினால், எங்கள் கடமைக்கு  இடையூறு விளைவித்ததாக கூறி உங்களை கைது செய்ய முடியும் என கடும் தொனியில் பேசியுள்ளார்.

இது குறித்து வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,


வேலை செய்ய வந்தவர்களிடம் முரண்பட்டு அவர்களை திருப்பி அனுப்ப முடியாது, இங்கே வந்திருக்கின்ற உறவுகளுக்கு விழிப்பு கொடுக்க  வேண்டும். 

உண்மையில் இந்த ஓ.என்.பி அலுவலகமானது மிகவும் கபடத்தனமாக எங்கள் உறவுகள் அவர்களிடம் பதிவு செய்யாதவிடத்து வெளி நிறுவனங்களில் இருந்து உதாரணமாக, செஞ்சிலுவை சங்கம், பொது அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு கள்ளத்தனமாக பதிவுகளை அனுப்புகிறார்கள்.

அப்படி வருபவர்களிடம் எதுவித கதையும் சொல்லாமல் உங்கள் பயில் மூடப்படாது, உங்களுக்கு இது நட்ட ஈடு இல்லை, பொருளாதார நெருக்கடியில் ஒரு உதவி என்று அவர்களை மயக்கி அந்த பணங்களை கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த 2 இலட்சம் எத்தனை நாள் போதும் என்பது எனக்கு தெரியவில்லை. என்றார்.


கைது செய்வோம். - யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மிரட்டிய அதிகாரி காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்றையதினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.காணாமல் போன ஆட்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனொரு கட்டமாக யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதோடு ஒரு சிலர் அதிகாரிகளிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த போராட்டத்தின் போது அதிகாரியொருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.அவர் தெரிவிக்கையில்,சேவை செய்கின்ற இடத்தில் ஆட்களை வர சொல்லியுள்ளோம். உங்களுக்கு சேவை விருப்பம் எனின் சத்தம் போடாமல் இந்த சேவையினை முடித்து விட்டு போகலாம். இல்லையேல் இந்த போராட்டத்தை வெளியில் சென்று செய்துகொள்ளலாம்.இதற்குள் வந்து எந்த சத்தமும், சேட்டையும் செய்யக் கூடாது. ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக இருந்தால் வெளியில் சென்று செய்துகொள்ளுங்கள்.இங்கே இடம்பெறுகின்ற வேலையினை நிறுத்துவதாக கூறினால், எங்கள் கடமைக்கு  இடையூறு விளைவித்ததாக கூறி உங்களை கைது செய்ய முடியும் என கடும் தொனியில் பேசியுள்ளார்.இது குறித்து வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,வேலை செய்ய வந்தவர்களிடம் முரண்பட்டு அவர்களை திருப்பி அனுப்ப முடியாது, இங்கே வந்திருக்கின்ற உறவுகளுக்கு விழிப்பு கொடுக்க  வேண்டும். உண்மையில் இந்த ஓ.என்.பி அலுவலகமானது மிகவும் கபடத்தனமாக எங்கள் உறவுகள் அவர்களிடம் பதிவு செய்யாதவிடத்து வெளி நிறுவனங்களில் இருந்து உதாரணமாக, செஞ்சிலுவை சங்கம், பொது அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு கள்ளத்தனமாக பதிவுகளை அனுப்புகிறார்கள்.அப்படி வருபவர்களிடம் எதுவித கதையும் சொல்லாமல் உங்கள் பயில் மூடப்படாது, உங்களுக்கு இது நட்ட ஈடு இல்லை, பொருளாதார நெருக்கடியில் ஒரு உதவி என்று அவர்களை மயக்கி அந்த பணங்களை கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த 2 இலட்சம் எத்தனை நாள் போதும் என்பது எனக்கு தெரியவில்லை. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement