• May 06 2024

எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும் - இஸ்ரேலை மிரட்டும் ஈரான்..!!

Tamil nila / Apr 21st 2024, 7:20 pm
image

Advertisement

நீங்கள் அனுப்பிய ட்ரோன்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு, மேலும், 'எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்'  என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்  தெரிவித்துள்ளார்.

ஈரான் எல்லைக்குள் இஸ்ரேல் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

மேற்காசியா பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் ஆதரவு ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின்போது, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துாதரகம் தாக்கப்பட்டது. இதைஅடுத்து, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.

அதன் அடிப்படையில் சமீபத்தில் ஒரே நாளில், 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஈரான் தாக்குதலில் ஈடுபட்டது.

அதில், 99 சதவீதத்தை வீழ்த்தியதாக, இஸ்ரேல் கூறியது.

இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், ஈரானின் இஸ்பகான் பகுதியில், நேற்று முன்தினம் சில ட்ரோன்கள் பறந்ததாகவும், அவற்றை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும் - இஸ்ரேலை மிரட்டும் ஈரான். நீங்கள் அனுப்பிய ட்ரோன்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு, மேலும், 'எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்'  என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்  தெரிவித்துள்ளார்.ஈரான் எல்லைக்குள் இஸ்ரேல் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேற்காசியா பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் ஆதரவு ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலின்போது, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துாதரகம் தாக்கப்பட்டது. இதைஅடுத்து, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.அதன் அடிப்படையில் சமீபத்தில் ஒரே நாளில், 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஈரான் தாக்குதலில் ஈடுபட்டது.அதில், 99 சதவீதத்தை வீழ்த்தியதாக, இஸ்ரேல் கூறியது.இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், ஈரானின் இஸ்பகான் பகுதியில், நேற்று முன்தினம் சில ட்ரோன்கள் பறந்ததாகவும், அவற்றை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement