• May 06 2024

இந்தியா - இலங்கை செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவையின் இன்றைய பயணம் இரத்து..!

Chithra / Oct 15th 2023, 9:35 am
image

Advertisement

 


இந்தியா-இலங்கை இடையேயான செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிப்பு வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 50 பேரும், காங்கேசன்துறையிலிருந்து 30 பேரும் கப்பலில் பயணம் செய்தனர்.

இந்நிலையில் இன்று போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தற்பொழுது கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும் KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்தியா - இலங்கை செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவையின் இன்றைய பயணம் இரத்து.  இந்தியா-இலங்கை இடையேயான செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிப்பு வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 50 பேரும், காங்கேசன்துறையிலிருந்து 30 பேரும் கப்பலில் பயணம் செய்தனர்.இந்நிலையில் இன்று போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தற்பொழுது கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும் KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement