• May 06 2024

முச்சக்கவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு குறித்து வெளியான தகவல் SamugamMedia

Chithra / Mar 5th 2023, 11:20 am
image

Advertisement

முச்சக்கர வண்டி தொழிற்துறையினர் எதிர்நோக்கும் எரிபொருள் ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் நாளை மறுதினம் (7) மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலான விடயங்கள் குறித்தும் அங்கு கலந்துரையாட உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேல் மாகாணத்திலுள்ள முச்சக்கரவண்டிகளை பதிவுசெய்யும் திட்டத்தின் கீழ், சுமார் 30,000 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் 120 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு தொடர்பான ஆவணங்களை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தி உரிய முறையில் பதிவைப் பெற்றுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் சுமார் 3 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளதாக அந்த அதிகார சபை கூறுகிறது.

இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களில் திருடப்பட்ட வாகனங்கள் தொடர்பில் 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு குறித்து வெளியான தகவல் SamugamMedia முச்சக்கர வண்டி தொழிற்துறையினர் எதிர்நோக்கும் எரிபொருள் ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் நாளை மறுதினம் (7) மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலான விடயங்கள் குறித்தும் அங்கு கலந்துரையாட உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேல் மாகாணத்திலுள்ள முச்சக்கரவண்டிகளை பதிவுசெய்யும் திட்டத்தின் கீழ், சுமார் 30,000 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எனினும் 120 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு தொடர்பான ஆவணங்களை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தி உரிய முறையில் பதிவைப் பெற்றுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்தில் சுமார் 3 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளதாக அந்த அதிகார சபை கூறுகிறது.இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களில் திருடப்பட்ட வாகனங்கள் தொடர்பில் 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement