• Nov 26 2024

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வசதி...!

Sharmi / Jul 8th 2024, 7:06 pm
image

எதிர்காலத்தில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வசதிகளை வழங்குவதற்கு நம்பிக்கை உள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை நாளை (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாளை(09) பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

28 வருடங்களின் பின்னர் இச்சட்டம் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதையும் குறிப்பிட வேண்டும்.

நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் தொலைபேசி நிறுவனங்களுக்கிடையேயான போட்டி நியாயமான போட்டியாகும். இந்த நியமனம் தொலைத்தொடர்பு அமைப்பு உரிமத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது, அதன்படி, உரிமம் வழங்கும் முறையும் எதிர்காலத்தில் கடல் கேபிள் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  எனவும் தெரிவித்தார்.



இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வசதி. எதிர்காலத்தில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வசதிகளை வழங்குவதற்கு நம்பிக்கை உள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை நாளை (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“நாளை(09) பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.28 வருடங்களின் பின்னர் இச்சட்டம் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதையும் குறிப்பிட வேண்டும்.நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் தொலைபேசி நிறுவனங்களுக்கிடையேயான போட்டி நியாயமான போட்டியாகும். இந்த நியமனம் தொலைத்தொடர்பு அமைப்பு உரிமத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது, அதன்படி, உரிமம் வழங்கும் முறையும் எதிர்காலத்தில் கடல் கேபிள் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement