• May 05 2024

யாழில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட இணையதளம் அறிமுகம்!

Sharmi / Dec 3rd 2022, 1:41 pm
image

Advertisement

Child Fund நிறுவனத்தினுடைய நிதி அனுசரணையுடன், VIOCE மற்றும் ORHAN நிறுவனங்கள் இணைந்து CBR மற்றும் CBID நிகழ்ச்சி திட்டத்தினை பல்வேறு மாவட்டங்களில்  நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இதனடிப்படையில் வட மாகாண சமூக சேவைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு  மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட வலைத்தளம் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபையின் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றையதினம் காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேற்படி இவ் வலைத்தளத்தின் ஊடாக மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ளும் இடங்கள் தொடர்பாகவும் அங்கு வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாகவும் (குறிப்பாக கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, வாழ்வாதாரம் , தொழிற்பயிற்சி போன்றன) தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட இணையதளம் அறிமுகம் Child Fund நிறுவனத்தினுடைய நிதி அனுசரணையுடன், VIOCE மற்றும் ORHAN நிறுவனங்கள் இணைந்து CBR மற்றும் CBID நிகழ்ச்சி திட்டத்தினை பல்வேறு மாவட்டங்களில்  நடைமுறைப்படுத்தி வருகின்றன.இதனடிப்படையில் வட மாகாண சமூக சேவைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு  மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட வலைத்தளம் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது.சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபையின் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றையதினம் காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.மேற்படி இவ் வலைத்தளத்தின் ஊடாக மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ளும் இடங்கள் தொடர்பாகவும் அங்கு வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாகவும் (குறிப்பாக கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, வாழ்வாதாரம் , தொழிற்பயிற்சி போன்றன) தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement